சென்னையின் 37 பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் மூடப்படுகின்றன: மாணவர்கள் போராட்டம்..!

சென்னையின் 37 பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் மூடப்படுகின்றன: மாணவர்கள் போராட்டம்..!

சென்னை பல்கலையின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி வைத்துள்ளதை அடுத்து மாணவர்கள் போராட்டம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் 424 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தாததை அடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் பேசுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசியதில் வங்கிக் கணக்குகளில் உள்ள பிடியை நீக்க குறைந்தபட்சம் ரூ.20 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என கூறியதாகவும், ஆனால் நாங்கள் அதை ஏற்க கூடிய நிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டதால், 3 நாள்களில் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு டஜன் காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும், திங்கள்கிழமைக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் கூறினார்.

இதனால் வகுப்பறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் இருட்டாக மாறக்கூடும் என்றும் மேலும் எங்கள் வழக்கமான வேலையைச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறினார்,.

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிப்பதாகவு, இதனால் மாணவர்கள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவோ வேலைக்கோ செல்ல முடியவில்லை என மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.