எளிய முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

Weight Loss Tips Tamil | எளிய முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

மக்களுக்கு இப்போதைக்கு இருக்குற பிரச்சனையில் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை பிரச்சனை தான். இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் நலனில் நாம் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளாதது தான். இந்த பதிவில் உள்ள உடல் எடை குறைக்கும் (Weight Loss Tips Tamil) வழிமுறைகளை தினசரி சரியாக பின்பற்றினால் விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

மூளைக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் நாம் உடலுக்கு அந்தளவுக்கு வேலை கொடுப்பது இல்லை. இதனால் உடல் எடையானது தாறுமாறாக அதிகரித்து விடுகிறது. அதிகப்படியான உடல் எடையால் அதனை குறைக்க யோசித்து யோசித்து பலருக்கு மனநோயே வந்துவிடுகிறது. இதனை தவிர்க்க இந்த பதிவில் உள்ள எளிய முறையில் உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்(Weight Loss Tips Tamil) உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

கேரட் (அ) தக்காளி ஜூஸ்

நாம் தினமும் நமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் கேரட் அல்லது தக்காளி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். இது நமது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடென்ட், பீட்டாகரோட்டின், எலெக்ட்ரோலைட்ஸ், கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றை அளிக்கிறது. மேலும் நமது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நாம் தினமும் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தினசரி உணவில் சப்பாத்தி, ஓட்ஸ் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் தானியங்களுடன் வாழைப்பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இவை நமது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம்

எலுமிச்சை சாறு

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நமது உடல் எடை குறைவதை நாம் கண்கூடாக காணலாம்.

க்ரீன் டீ

தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால் தினசரி 72 கலோரியை எரிக்கலாம். மேலும் க்ரீன் டீயானது நமது உடலின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. தினமும் க்ரீன் டீ குடித்து வருபவர்களுக்கு ஒரு வருடத்தில் 7.3பவுண்ட் அளவுக்கு உடல்எடை குறையும்.

இதையும் படிங்க: தொப்பையை குறைக்க டிப்ஸ்

உடற்பயிற்சி

என்னதான் சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு இன்றியமையாத ஒன்று. தினமும் குறைந்தபட்சம் அரைமணிநேரம் முதல் அதிகபட்சம் ஒருமணிநேரம் வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒரே நேரமாக உடற்பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் காலை மற்றும் மாலை என நேரத்தை பிரித்தும் செய்யலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment