உடல் எடையை குறைக்க டிப்ஸ்

Weight Loss tips in Tamil | உடல் எடையை குறைக்க டிப்ஸ்

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் மனஅழுத்ததால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் உடல் எடையை குறைக்க அதிகளவு பணத்தையும் செலவிடுகின்றனர். உடல் எடையை குறைக்க உதவும் வழிமுறைகளை (Weight Loss Tips) இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைப்பது என்பது முடியாத காரியம் அல்ல, எளிதான ஒன்று தான். சரியான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றி வந்தால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் இது தற்காலிகமான ஒன்று தான். இவற்றை நிறுத்தினால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை தாண்டி மேலும் சில வழிமுறைகளை பின்பற்றினால் தான் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

தண்ணீர்

நாம் அனைவரும் தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலானது வறட்சி இல்லாமல் இருக்கும், மேலும் நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மேலும் வயிற்றை சுற்றில் உள்ள தொப்பையும் குறையும்.

தேன்

வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது உணவில் சேர்க்கப்படும் அதிகளவு சர்க்கரை தான். எனவே நாம் உண்ணும் உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேன்(Honey) சேர்த்து வந்தால் தொப்பை குறையும். மேலும் இதனால் நமது உடல் எடையையும் குறையும்.

நட்ஸ்

உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் முதலில் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான இந்த கொழுப்புகள் நட்ஸில்(Nuts) அதிகளவு உள்ளது. எனவே பாதம், வேர்க்கடலை மற்றும் வால்நட் போன்றவற்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் எலுமிச்சை சாறு(Lemon Juice) குடித்து வந்தால் நமது வயிற்றை சுற்றியுள்ள தொப்பையை குறைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பையை குறைக்கலாம்.

பூண்டு

நாம் உணவில் சேர்க்கும் பூண்டில்(Garlic) எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தி உள்ளது. எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு உடல் எடையும் குறையும். மேலும் நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகும்.

இஞ்சி

நாம் உண்ணும் உணவில் இஞ்சி(Ginger) அதிகளவு சேர்த்து வந்தால் தொப்பையை குறைக்கலாம். இஞ்சியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது நமது உடலில் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் C, நமது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. எனவே உடல் எடையை குறைத்து அழகான உடலை பெற, பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகளவு சாப்பிட வேண்டும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் C யில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளது. மேலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் தன்மை உடையது. எனவே தொப்பை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment