உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்

Weight gain Foods in Tamil | உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று உடற்பயிற்சி, டயட் மற்றும் மாத்திரை என பல்வேறு வழிமுறைகளை பயன்டுத்துபவர்கள் பலர் இருந்தாலும், “எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டேங்கிறது” என்று கவலைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உடல் எடைக் குறைவாக உள்ளவர்கள் குறிப்பிட்ட ஒரு சில உணவுகளை(Weight gain Foods) உண்பதன் மூலம் தங்களின் உடல் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்(Weight gain Foods) பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

வேர்க்கடலை
உடல் எடையை அதிகரிப்பதிலும், அழகான சதைப்பிடிப்பான உடலை உருவாக்கவும் வேர்க்கடலை உதவுகிறது. வேர்க்கடலையில் பாதாமிற்கு இணையான சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் பாதாம் சுவை பிடிக்காதவர்கள் வேர்க்கடலையை முயற்சி செய்யலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வேர்க்கடலை சாப்பிடலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் அதிகப்படியான வளர்ச்சி பெறும்.
பால்
பாலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. காலை மற்றும் இரவு கட்டாயம் ஒரு கிளாஸ் பால் குடிக்க வேண்டும். மேலும் சுடவைத்த பாலில் சர்க்கரை மட்டும் சேர்த்து குடிக்க வேண்டும்.பாலில் டீ அல்லது காபித்தூள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை சேர்ப்பதால் பாலில் உள்ள சத்து முழுமையாக நமது உடலுக்கு கிடைப்பதில்லை, எனவே, அதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முடிந்த மட்டும் பால் குடிக்கலாம். மேலும், பெரும்பாலான ஆண்கள் ஒல்லியாக உள்ள பெண்களை அதிகமாக விரும்புவதில்லை. எனவே திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதன் மூலம் நல்ல புஷ்டியான அழகான உடலமைப்பைப் பெருவதுடன், உடலில் பொலிவு ஏற்படும். பசும்பால் மற்றும் பசு வெண்ணெய், இவை இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.

தயிர்
வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் குறைந்தது 4 நாட்களாவது மதிய உணவில் தயிர் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தயிர் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த உணவு. மேலும் இதை உணவில் சேர்ப்பதால் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.
வாழைப்பழம்
உடல் எடை அதிகரிப்பில் அதிகம் உதவுவது வாழைப்பழம். அதிலும், நேந்திரம் பழம் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தில் அதிகளவு கலோரிகள் உள்ளது. ஒரு நாளில் குறைந்த பட்சம் 2 வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும். உடல் எடை உடனே அதிகரிக்க விரும்புபவர்கள் உணவிற்கு பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலர்திராட்சை
உலர்த்திராட்சையில் 99% கலோரிகள் உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுப்பொருள். தினமும் மாலைநேரத்தில் இதனை சாப்பிட்டு வரலாம். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்
உளுந்து
பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிகவும் நல்லது. வயதுக்கு வந்த பெண்களுக்கு, மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்களுக்கு, வாளிப்பான உடல்வாகு பெற உளுந்து மிகவும் உதவுகிறது. என்ன தான் இட்லி, தோசை என உளுந்து சேர்த்த உணவுகள் அதிகம் சேர்த்துக் கொண்டாலும், உளுந்தை ஊறவைத்து பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்குள் சென்றடைகிறது. இதனால் உடல் எடை விரைவாக அதிகரிக்கும். அல்லது உளுந்தை கஞ்சியாக காய்ச்சி சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
எள்
`இளைத்தவனுக்கு எள்ளு’ இது முன்னோர்கள் கூறிய முதுமொழி. இது மருத்துவ மொழியும் கூட. மிகவும் இளைத்த உடல் உடையவர்கள் உடல் எடையை அதிகரிக்க எள் பெரிதும் உதவுகிறது. இட்லி மற்றும் தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி போன்றவற்றை சேர்க்கலாம். மேலும் நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை கூட சாப்பிடலாம்.
கீரை மற்றும் தானிய வகைகள்
முடிந்தளவு சாப்பிடும் உணவுகளில் கீரை மற்றும் தானிய உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் இவை நமது உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகின்றது.
தேங்காய்ப்பால்
வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. தேங்காய் பால் குடிப்பதால் உடல் எடை கண்டிப்பாக அதிகரிக்கும். இதற்கு காரணம், தேங்காய் பாலில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடை வேகமாக அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்.
முந்திரி பருப்பு
உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு கையளவு முந்திரி பழத்தை சாப்பிட்டால் போதும். உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கியபங்கு வகிக்கிறது. மேலும் இது உடல் எடை வேகமாக அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு கை அளவு பாதாம் பருப்பு தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
முட்டை
உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமென்றால் வளமான புரதச்சத்து அதிகம் உள்ள முட்டையை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் சாப்பிட வேண்டும். காரணம் இதில் உள்ள கொழுப்பானது உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவுகிறது. தினமும் இரண்டு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.
ஆளி விதை
ஆளி விதையில் மோனோசாச்சுரேட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. எனவே உணவில் போதுமான அளவு ஆளி விதையை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம்.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. உணவில் சீரான இடைவெளியில் கைக்குத்தல் அரிசியை சேர்த்து வந்தால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு உடல் எடையானது வேகமாக அதிகரிக்கும்.
சால்மன் மீன்
சால்மன் மீனில் புரதச்சத்து அதிகம் உள்ளது. தினசரி ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன் சாப்பிடுவதால், நமது உடலுக்குத் தேவையான புரதச்சத்து உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள இன்றியமையா எண்ணெய்கள் நம்மை சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்கிறது.
சூரை மீன்
சூரை மீன்களில் நமது உடலுக்கு தேவையான முக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், நமது உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி செய்கிறது. மதிய உணவில் அடிக்கடி சூரை மீன் சேர்த்து வந்தால் உடல் எடையானது கொஞ்சம் வேகமாக அதிகரிக்கும்.
இறால்
நீங்கள் கடல் உணவு பிரியர்களா? அப்படியென்றால் தினசரி இரண்டு முறை இறால் சாப்பிடலாம். இறால்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துகளும், நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமிலங்களும் உள்ளது. இவை கலோரிகளை நமது உடலில் தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவுகிறது.
கோழி நெஞ்சுக்கறி
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து அதனுடன் மயோனைஸ் தடவி மதிய உணவாக சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது.
கொத்திய மாட்டிறைச்சி
கொத்திய மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புசத்து உள்ளது. இதை சாண்ட்விச் உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஏனெனில் கொத்திய மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பானது சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடையானது வேகமாக அதிகரிக்கும்.
பாலாடைக் கட்டி
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுக்கும். இதனால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். சைவ உணவுகள் உண்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
ஓட்ஸ்
தினமும் காலை ஒரு பௌல் அளவு ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு ஆகும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உடனே பெறமுடியும். மேலும் இதனால் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில், நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. உருளைக்கிழங்கை தினமும் உணவில் பயன்படுத்தினால், இதில் உள்ள சத்தான கொழுப்பானது நமது உடலில் படியும். இதனால் நமது உடல் எடையானது வேகமாக அதிகரிக்கும்.
சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. சேனைக்கிழங்கை ஒருமுறை உண்ணும் போது, நமது உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கிறது. எனவே இதனை அடிக்கடி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடையானது வேகமாக அதிகரிக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் அதிகளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது நமது உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. இந்த வேர்க்கடலை வெண்ணெயை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், நமது உடல் எடையானது ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் அதிகளவு கலோரிகள் உள்ளது. மேலும் இதில் லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆலிவ் எண்ணெயை அடிக்கடி நமது உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இதையும் படிங்க: தொப்பையை குறைக்க டிப்ஸ்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment