சரும பாதுகாப்பிற்கு உதவும் துளசி

Tulsi Skin Benefits | சரும பாதுகாப்பிற்கு உதவும் துளசி

தனது சருமத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். இதற்கு ஒரே தீர்வு துளசி. துளசி மருத்துவத்திற்கு எந்த அளவுக்கு பயன்படுகிறதோ அதே அளவுக்கு முக அழகிற்கும் சரும பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இந்த பதிவில் துளசி சரும பாதுகாப்பிற்கு(Tulsi Skin Benefits) எவ்வாறு உதவுகிறது எனக் காணலாம்.

இதையும் படிங்க: முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

துளசி இலையானது சரும பராமரிப்பு, பொடுகு தொல்லை மற்றும் இளநரை ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. துளசியானது நமது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் சரும அழகிற்கு தேவையான பல்வேறு பலன்களை அள்ளித்தரும் மூலிகையாக உள்ளது.

இதையும் படிங்க: முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க வீட்டு வைத்தியம்

துளசி இலையின் பயன்கள்

  • துளசி இலையில் உள்ள சரும பாதுகாப்பு சக்தியானது கண்ணில் கருவளையம் ஏற்படுவதையும் முகப்பருக்கள் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.
  • துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டானது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது.
  • காய்ந்த ஆரஞ்சு தோலை துளசியுடன் நன்கு அரைத்து முகத்தில் முகப்பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் விரைவில் மறைந்து விடும்.
  • துளசி இலைகள் 10 எண்ணம் எடுத்து நன்கு அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் நன்றாக பொலிவாகும்.
  • துளசி இலையை நன்கு அரைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு தடவ வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் இளநரையை குணப்படுத்தலாம்.
  • துளசி இலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு அடித்து முகத்தில் பூசினால் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கி முகம் நன்றாக பொலிவு பெறும்.
  • பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் சேரும் தூசு மற்றும் அழுக்குகளால் தான். துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து தலையின் அடி வேர் வரை தடவி தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை சரியாகும்.
  • துளசி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பின்னர் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்துவிடும்.
  • துளசி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குகிறது.

இதையும் படிங்க: கூந்தல் வேகமாக வளர டிப்ஸ்…!

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment