பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

Tips to Reduce Tummy after Pregnancy | பிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

பிரசவத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு தொப்பை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான். இந்த தொப்பையை எளிதாக சரிசெய்து விடலாம். சுகப் பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாக பிரசவமோ எதுவாக இருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் இயற்கையாகவே தொப்பை ஏற்படும். பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?(Reduce Tummy after Pregnancy) என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதையும் படிங்க: வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?

பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் பெண்களுக்கு அவர்களின் உடலில் மட்டுமல்லாமல் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடுத்தும் உடையில் இருந்து சாப்பிடும் உணவு வரை பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையானது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

அனைத்துப் பெண்களும் தான் பிறரை விட அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதிலும் இளம் வயது தாய்மார்கள் தங்களின் அழகின் மீது பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளவர்கள். பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் தங்களின் அழகு குறைந்து விட்டதோ என்று கவலைப்படுவார்கள். மேலும் இந்த தொப்பையால் விரும்பிய ஆடையைக் கூட அணியமுடியாத சூழல் கூட ஏற்படும்.

பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் இந்த தொப்பையைக் குறைக்க பெரும்பாலான பெண்கள் தங்களின் உணவை பெரிய அளவில் குறைத்துகொள்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இது உடலளவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் தொப்பை குறையாமல் அதிகரிக்கவே செய்யும். சரியான முறையில் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி(Reduce Tummy after Pregnancy) என தெரிந்து அதில் உள்ள வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக தொப்பையை குறைத்து விரும்பிய உடலழகைப் பெறலாம்.

வயிற்றை இறுக்கிக் கட்டுதல் (Abdominal binding)
இந்த முறையில் ஒரு நீளமான துணியை எடுத்து உங்கள் வயிற்றுப் பகுதியில் நன்கு இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும். இதற்கு சற்று கெட்டியான வேட்டி, துப்பட்டா அல்லது துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான கடைகளில் இதற்கென்றே பட்டைகள் கிடைக்கின்றன. இந்த பட்டைகளை வாங்கி கூட பயன்படுத்தலாம். 4 வாரம் முதல் 6 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பைக் குறையத் தொடங்கும்.

குறிப்பு: தொப்பை குறைய நல்ல வழியாக இருந்தாலும் அறுவைசிகிச்சை மூலமாக பிரசவம் மேற்கொண்ட பெண்கள் இதை முயற்சிசெய்ய வேண்டாம்.

தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு (Honey and Lemon)
இது ஒரு எளிமையான வழிமுறை ஆகும். இதமான சுடு தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு பிழிந்து அதனுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்தால் சிலநாட்களிலேயே தொப்பை குறைவதை கண்கூடாக காணலாம்.

குறிப்பு: இதை சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்ற பெண்களும், அறுவைசிகிச்சை முறையில் பிரசவம் மேற்கொண்ட பெண்களும் குடிக்கலாம். மேலும் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறில் உள்ள மருத்துவகுணங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.

தாய்ப்பால் (Breastmilk)
தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தினமும் தாய்ப்பால் கொடுத்து வந்தாலே அவர்களின் எடை மேலாண்மை அடையும். இது எவ்வாறு என்றால் ஒரு தாய் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் அவளின் உடலில் இருந்து தினமும் 500 கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே குழந்தைக்கு தினமும் தவறாமல் தாய்ப்பால் கொடுத்துவந்தாலே அதிகப்படியான உடல் எடையைக்9 குறைக்கலாம்.
சரியான உணவு (Balanced diet)
உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலமாக தொப்பையை விரைவாக குறைக்கலாம். முக்கியமாக உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சோடா மற்றும் கார்போனேட் கலந்த பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களான பப்பாளி, மாம்பழம், திராட்சை போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள கீரைவகைகள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்புசத்து மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்கள் , நொறுக்குத் தீனிகள் மற்றும் சிற்றுண்டிகளைத் தவிர்க்க வேண்டும். இவை உள் எடையை அதிகரிக்க காரணமாக அமையும்.

ஒரே சமயத்தில் அதிகளவு உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக உண்பதால் தொப்பை குறைய வாய்ப்புகள் அதிகம். மூன்று வேளை உணவு உண்பதற்கு பதிலாக அதையே ஆறு வேளையாக பிரித்து உண்ணலாம். இது பிரசவத்திற்கு பின்னர் நல்ல ஒரு உணவு முறையாக அமையும்.

உடற்பயிற்சி செய்யுங்கள் (Do exercise)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்கள் எளிய உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயிற்றுச் சதைகளை குறைக்க உதவும் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை செய்வதன் மூலமாக எதிர்பார்த்த பலன்களை விரைவில் பெறலாம்.

குறிப்பு: அறுவைசிகிச்சை மூலமாக பிரசவம் மேற்கொண்ட தாய்மார்கள் சிறிது காலம் பொறுத்திருந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும். இல்லையெனில்  இது உடலை பாதிக்கக் கூடும்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் (Drink more water)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்கள் நாள் ஒன்றுக்குத் தவறாமல் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகரிப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேற உதவுகிறது. தண்ணீர் அதிகமாக குடிப்பதால் சருமம் அதிக பொலிவு பெறுகிறது. மேலும் முக அழகும் அதிகரிக்கும்.
தூக்கம் (Sleep)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தூக்கம் என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது நன்கு தூங்க வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது. சரியான தூக்கம் கிடைக்காத பட்சத்தில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உண்டு.
அமைதியான மனம் (Peaceful mind)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்கள் மனதை எப்போதும் அமைதியாகவும் மற்றும் நிம்மதியாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படும் போது உடலும் சேர்த்து பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் உடல் எடையும் கூடவே அதிகரிக்கிறது. எனவே மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி (Walking)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறலாம். தினமும் நடைப்பயிற்சி செல்வதால் உடல் எடை குறைவதோடு, மனம் புத்துணர்ச்சி பெரும்.
இனிப்புகளை தவிர்க்கவும் (Avoid sweets)
பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்கள் முடிந்தளவு இனிப்பு மிட்டாய்கள், இனிப்பு பலகாரங்கள் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது நலம். ஏனெனில் இனிப்புப் பண்டங்கள் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே கூடியமட்டும் இனிப்புப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment