தொப்பையை குறைக்க டிப்ஸ்

Tips to reduce Belly Fat in Tamil | தொப்பையை குறைக்க டிப்ஸ்

இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னை தொப்பை. இந்த தொப்பையை குறைக்க பெரும்பாலானோர் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். தற்போது தொப்பையை குறைப்பது உலகத்தில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. என்ன செய்தாலும் தொப்பை குறையாமல் நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர். பல இடங்களில் இந்த தொப்பையால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொப்பையை குறைக்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது உடற்பயிற்சியும் டயட்டும் தான். இந்த பதிவில் வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்கும் வழிமுறைகளை(Tips to reduce Belly Fat) காணலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

தேன்

தொப்பையை விரைவாக குறைப்பதில் தேன்(Honey) மற்றும் எலுமிச்சைச்சாறு(Lemon Juice) முக்கியப்பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சுடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 2 வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்.

புதினா

அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி விட்டாலே தொப்பை தொடர்பான பிரச்சினைகள் பாதியளவு குறைந்து விடும். இந்த கொழுப்புகளை நீக்க புதினா(Mint) உதவுகிறது. தினசரி உணவில் புதினாவை சேர்த்து சாப்பிட்டால் நமது பித்த பையில் உள்ள கொழுப்புகள்(Fats) கரைந்துவிடும். மேலும் இது மிக குறைந்த அளவு கலோரி கொண்டதால் உடல் எடையையும் கணிசமாக குறைகிறது.

தக்காளி

தக்காளியில் உள்ள 9-oxo-ODA என்கிற முக்கிய மூல பொருளானது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அளவு தக்காளியில் 33 கலோரிகள் இருக்கும். உடை எடையை குறைப்பதில் தக்காளி(Tomato) முக்கிய பங்காற்றுகிறது. எனவே தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேன் மற்றும் பூண்டு

தென் மற்றும் பூண்டு(Garlic) இணையானது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லது. தினமும் காலையில் இதனை தவறாது சாப்பிட்டு வந்தாலே தொப்பையை விரைவில் குறைக்கலாம். பூண்டு 10 பல் எடுத்து அதன் தோலை உரித்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அதனுடன் தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் நன்கு ஊறிய பின்னர் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பை நீங்கி விடும்.

இலவங்க பட்டை

இலவங்க பட்டையானது(Cinnamon) அதிகளவு மருத்துவ பயன்கள் உடையது. இது நமது உடல் எடையை விரைவில் குறைக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலை காபியுடன் சிறிதளவு இலவங்க பொடியையும் சேர்த்து குடித்தால் தொப்பை விரைவில் குறைந்து விடும்.

சீரக நீர்

சீரக நீரானது(Cumin water) நமது உடலில் செரிமான பிரச்சினை(Digestive issue) முதல் ரத்த ஓட்டம்(Blood flow) வரை பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இதனை வடிகட்டி தினமும் காலையில் குடித்து வந்தால் வயிறு உப்பசம்(Abdominal bloating) மற்றும் தொப்பை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

ஓமம்

ஓமம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. செரிமான கோளாறுகளை(Digestive disorder) நீக்கி, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் காலை சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஓமம்(Basil) 1 ஸ்பூன் சாப்பிடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீக்கி தொப்பையை குறைக்கலாம்.

வெள்ளரிக்காய்

நீர்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயானது(Cucumber) தொப்பையை குறைக்க மிகவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment