மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

Tips to avoid Premenstrual Syndrome | மாதவிலக்கை தள்ளி போட டிப்ஸ்

மாதவிலக்கு(Premenstrual Syndrome) என்பது பெண்களுக்கு மாதம் ஒருமுறை நிகழும் இயற்கையான நிகழ்வு. சில பெண்களுக்கு இது சரியாக நிகழும், சிலருக்கு நாட்கள் முந்தும், ஒரு சிலருக்கு பிந்தும். சில பெண்களுக்கு நேரம் காலம் இல்லாமலும் ஏற்படும். வீட்டில் ஏதேனும் விழாக்கள் நிகழும் போது மாதவிலக்கு வந்தால் அவ்வளவு தான். அவர்களால் ஒன்றும்  செய்ய முடியாது. இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மாதவிலக்கை தள்ளி போட குறிப்புகள்(Tips to avoid Premenstrual Syndrome)உள்ளது.

பெண்கள் பலருக்கும் ஏற்படும் இந்த சீரற்ற மாதவிடாய்க்கு(Irregular Menstruation) அவர்கள் உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றமே ஆகும். மாதவிலக்கை தள்ளி போட பெண்கள் பெரும்பாலும் ஆங்கில மருந்துகளையே நாடுகின்றனர். இயற்கையான முறையிலே மாதவிலக்கை தள்ளிப்போடலாம்.

பொரிகடலை

மாதவிலக்கை தள்ளி போட சரியான ஒன்று பொரிகடலை(பொட்டுக்கடலை – Fried Gram Dal). இது ஆங்கில மருந்துகளை போல பின்விளைவுள் ஏதும் ஏற்படுத்தாது. காலையில் ஒரு கைப்பிடி அளவுக்கு பொறிக்கடலையை எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் மாதவிலக்கு உறுதியாக ஏற்படாது.

இது சாப்பிட்டு ஒருமணிநேரம் வரி காபி மற்றும் டீ எதுவும் குடிக்க கூடாது. பொறிகடலையை பயன்படுத்தி ஐந்து நாட்கள் வரை கூட மாதவிலக்கை தள்ளிப்போடலாம். இதனால் நமது உடலுக்கு புரோட்டின்(Protein) கிடைக்கும். இது நமது உடலை பாதிக்காத எளிய வழி.

சப்ஜா விதை

மாதவிலக்கு பிரச்சனையை சரிசெய்யும் ஒரு அற்புதமான அருமருந்து ‘சப்ஜா விதை(Sabja Seeds)’. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த விதைகளை வாங்கி இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளரில் சிறிதளவு தயிர்(Curd) ஊற்றி அதனுடன் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு ஊறவைக்க வேண்டும். காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடனடியாக இரத்தப்போக்கு நிற்கும்.

மாதவிடாய்(Menopause) ஏற்படும் நாள் காலையில் இந்த சப்ஜா விதை மற்றும் தயிர் ஊறவைத்த கலவையை சாப்பிட வேண்டும். பின்னர் இரண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அன்று நாள் முழுவதும் மாதவிலக்கு ஏற்படாது.

மாதவிலக்கு உடனடியாக ஏற்பட டிப்ஸ்

  • சிறிதளவு எள் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு உடனே ஏற்படும். காரணம் எள் மற்றும் வெல்லம் இரண்டும் சூட்டை கிளப்பும். இதனால் சீக்கிரமாக மாதவிடாய்(Menopause) ஏற்படும்.
  • சிறிதளவு கற்பூரத்தை வெற்றிலையில் வைத்து சாப்பிட்டால் உடனடியாக மாதவிலக்கு நிகழும்.
  • இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் அதிகளவு வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சீக்கிரம் மாதவிடாய்(Menopause) ஏற்பட உதவுகிறது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment