டைட்டான பிரா போடுபவரா நீங்கள்? அப்ப இத படிங்க…

பெண்கள் அணியும் உள்ளாடைகளின் பங்கு 

அன்றாடம் பெண்கள் அணியும் உள்ளாடை (பிரா-Bra) சரியான அளவில் இருக்க வேண்டியது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிராவானது பெண்களின் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. தற்போது சந்தையில் ஏராளமான ஃபேன்ஸி பிராக்கள் வந்துள்ளன. இந்த ஃபேன்ஸி பிராக்களை வாங்க அனைத்து பெண்களுக்குமே விருப்பம் இருக்கும். ஆனால் வாங்கும் பிரா டைட்டாகவும் இல்லாமல் லூசாகவும் இல்லாமல் சரியான அளவில் இருப்பது மிகவும்  முக்கியம். பெண்கள் டைட்டான உள்ளாடை அணிவதால் பல்வேறு பிரச்சனைகள் (Problems Using Tight Bra) ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

உலக அளவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் சரியான அளவிலான உள்ளாடை அணிவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதோடு உடல் உபாதைகளுக்கும் ஏற்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சரியான அளவில் உள்ளாடை அணியாத பெண்களுக்கு தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண்கள் உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய இயற்கை வழிகள்

டைட்டான உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் | Problems Using Tight Bra

  • பெண்கள் அதிகளவு டைட்டாக போடப்படும் ப்ராவினால் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
  • பிரா டைட்டாக போடுவதால் மார்பு எலும்புக்கூடு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது.
  • பெண்கள் அதிக அளவு டைட்டாக பிரா போடுவதால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
  • சரியான அளவு தேர்ந்தெடுக்காமல் டைட்டாக பிரா போடுவதால் பிராவில் உள்ள பட்டைகள் தோளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் முதுகுவலி   அதிகமாகிறது. மேலும் இது டென்சனை அதிகமாக்கிவிடுகிறது.
  • அதிக அளவு  டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் தழும்புகள் ஏற்படுகிறது.
  • பிரா டைட்டாக போடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடுகிறது.
  • உடல் செல்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் சரியான அளவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தலைபகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலைவலி ஏற்படுகிறது.
  • டைட்டாக போடப்படும் ப்ராவினால் மார்புபகுதியில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் மார்பகத்தில் வலி ஏற்படுகிறது. மேலும் இதனால் மார்பகத்தில் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

இதையும் படிங்க: பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

பெண்கள் உள்ளாடை போடும்போது அதிக அளவு லூசாக போட்டாலும் ஆபத்து, மேலும் அதிக அளவு டைட்டாக போட்டாலும் ஆபத்துதான். எனவே சரியான அளவில் உள்ளாடை தேர்ந்தெடுந்து போட்டால் மட்டுமே உடல் மற்றும் மனது ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் டைட்டான உள்ளாடை போடுவதால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் (Problems Using Tight Bra) குறித்து இந்தப் பதிவில் நாம் பார்த்தோம். எனவே பெண்கள் சரியான அளவு உள்ளாடை தேர்ந்தெடுத்து போடுவது என்பது அவசியமான ஒன்று.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment