கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

Pregnancy Physical Relationships | கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க, கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தாம்பத்தியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பதிவில் கர்ப்ப கால தாம்பத்தியம்(Pregnancy Physical Relationships) கருவில் வளரும் சிசுவை பாதிக்குமா? கர்ப்ப காலத்தில் வைத்துக்கொள்ளும் தாம்பத்தியம் ஏதேனும் பின்னாட்களில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுத்துமா? என்பதை காணலாம்.

இதையும் படிங்க: வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?

சமூகம் தழைத்தோங்க ஆண் – பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போன்றவற்றை போல தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு மிகவும் அவசியமான ஒன்று என்றும், அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் உறவு கொள்வது என்பது தவறு அல்ல.

கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சிலர் சித்திரிப்பதும் விந்தையாக உள்ளது. கருத்தரித்த நாளில் இருந்து பெண் தாம்பத்திய உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

இதையும் படிங்க: வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அறவே கூடாது என்று ஒரு சிலர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாதம் வரை ரொம்ப ஹார்ஷா வேண்டாம் என்று கொஞ்சம் தவிர்க்க சொல்லலாம். அதற்கு பின்பு மனைவிக்கு எந்த மறுப்பும் இல்லையெனில் எப்பவும் போல தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

தாம்பத்திய உறவால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. குழந்தை நன்றாக பாதுகாப்பாக தாயின் பனிக்குடத்தில் தான் வளரும். கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் அளவில் சௌகரியமாக பீல் பண்ணினால் அதற்கேற்றாற்போல் இரண்டு பேரும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவில் பிரச்சனை உள்ளவர்கள் சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கலாம்.

இது தவிர எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். மேலும் சில இன்ஃபெக்‌ஷன் உள்ளவர்களும் குறிப்பிட்ட காலம் வரை தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் இல்லாமல், கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அன்பாக, அனுசரணையாக இருந்தாலே போதும். கணவன் – மனைவிக்கு இடையேயான தாம்பத்தியமானது அவர்களுக்கு இடையில் உள்ள பாசப்பிணைப்பை அதிகப்படுத்துமே தவிர ஒருபோதும் குறையாது.

கர்ப்பகாலத்தில் கணவன் – மனைவி இருவரும் அவர்கள் பரிசோதனைக்கு செல்லும் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் குறித்து என்ன வழிமுறைகள் சொல்கிறார்களோ அதை பின்பற்றினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றடுக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment