கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

Precautions for Corona Virus | கொரோனா வைரஸ் தற்காப்பு முறைகள்

தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்(Corona) என அழைக்கப்படும் உயிர்கொல்லி வைரஸ். கொரோனா வைரஸ்(Corona Virus) என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி ஆகும். சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்றால் என்ன? எவ்வாறு கொரோனா வைரஸ்(Corona Virus) பரவுகிறது? இந்த வைரசை தடுக்க முடியுமா? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ்(Corona Virus) அறிகுறிகள்

 • மூக்கு ஒழுகுதல்
 • தலைவலி
 • இருமல்
 • சுவாசக்கோளாறு
 • தொண்டை கரகரப்பு
 • காய்ச்சல்
 • உடல் சோர்வாக இருத்தல்
 • ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்
Symptoms of Coronavirus
Symptoms of Corona Virus | கொரோனா வைரஸ் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் முதலில் ஜலதோஷம் ஏற்படும். பின்னர் காய்ச்சல் ஏற்படும். இந்த காய்ச்சலானது உடல் வெப்பத்தைக் காட்டிலும் அதிகளவு வெப்பநிலையைக் கொண்டிருக்கும். காய்ச்சல் தொடர்ந்து இருமல் ஏற்படும். படிப்படியாக இருமல் அதிகரிக்கத் தொடங்கும். சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனைத்தொடர்ந்து ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் சாதாரணமான ஜலதோஷம் தான் ஏற்படும். பின்னர் காய்ச்சல் உருவாகி நிமோனியா எனும் நுரையீரல் தொற்றினை இந்த கொரோனா வைரஸ் உண்டாக்கும். ஆரம்பத்திலே முறையான சிகிச்சை பெறாவிட்டால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்கக்கூட நேரிடும்.

கொரோனா வைரஸ் எப்படி பரவும்?

 • கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், மற்றும்  சளியை உமிழும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக பரவுகிறது(<20%).
 • இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் போது கைகளில் கொரோனா நோய் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன.
 • கொரோனா நோய்த்தொற்று கிருமிகள் ஒட்டியுள்ள கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தைத் தொடும் போது இந்த கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது(>80%).
 • கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களிடம் நெருக்கமாக இருத்தல், அவர்களை தொடுதல், மற்றும் கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களிடம் கை குலுக்குதல் போன்ற காரணங்களாலும் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும்.

கொரோனா வைரசுக்கு மருந்து உண்டா?

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டுபிடித்து அதற்கு உண்டான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதன் மூலம் கொரோனா நோய் பரவாமல் தடுக்கலாம்.

கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், சுவாசக்கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இதனை சாதாரணமாக எடுத்து அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மட்டுமே பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் இதனால் தொண்டையில் கடுமையான வலி ஏற்படும். ஒரு சிலருக்கு மார்புப் பகுதியில் கூட  லேசான வலி இருக்கும். உடலை மிகவும் பலவீனப்படுத்தும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தையே அடியோடு பாதிக்கச் செய்யும்.

கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள்

 • அடிக்கடி கையை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 நொடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 • உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை கைக்குட்டை அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
 • 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோரை பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 • மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 • வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
 • நம்மை சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • நீராவி கொண்டு ஆவி பிடிக்கலாம். மேலும் இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
 • சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
 • லேசாக முடியாதது போல உணர்ந்தால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுக்க வேண்டும்.
 • நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிட வேண்டும்.
COVID-19
கொரோனா… செய்ய வேண்டியதும் | செய்யக்கூடாததும்

பொதுமக்கள் கவனத்திற்கு

 • இருமல் மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
 • 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • சமீபத்தில் வெளிநாடு பயணம் செய்தவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மனிதர்களைத் தாக்கும் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நம்மை நாமே பாதுகாப்பாக வைத்துக்கொள்வதன் மூலமாகவே இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment