மாதுளையின் மருத்துவ குணங்கள்

Pomegranate Benefits in Tamil | மாதுளையின் மருத்துவ குணங்கள்

மாதுளம் பழம்(Pomegranate) ஏராளமான மருத்துவ குணங்கள்(Medical Benefits) உள்ள இயற்கையின் வரப்பிரசாதம். மாதுளம் பழம், மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை போன்ற அனைத்தும் ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது. மாதுளையில் மிக அதிக அளவிலான உயர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மாதுளை சுவையில் மட்டுமல்ல, நமது உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதிலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த பதிவில் மாதுளம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் (Pomegranate Benefits) பற்றி காணலாம்.

இதையும் படிங்க: செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

அளவிட முடியாத பல நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்ற பழ வகைகளை காட்டிலும் மிக அதிகளவில் உள்ளது. மாதுளையில் ஆரோக்கியம் சம்பந்தமான சத்துக்கள் மட்டுமல்ல, நமது கூந்தல் மற்றும் சருமத்திற்கான தேவையான சத்துக்களும் அடங்கியிருக்கிறது.

இதையும் படிங்க: பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து(Iron), சர்க்கரை, சுண்ணாம்புச்சத்து(Calcium), பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும்(Minerals), உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி(Immunity) அதிகரிக்கிறது. மேலும் நமது உடலுக்குத் தீங்கு இழைக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதனால் நமது உடலில் நோய் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

இதய ஆரோக்கியம்

பொதுவாக கிரீன் டீ மற்றும் ரெட் ஒயினில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டும் பாலிபினைலும் இருக்கிறது. ஆனால் அவை இரண்டை காட்டிலும் அதிகமாக ஒரு கிளாஸ் மாதுளம் பழ ஜூஸில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள்(Anti-Oxidants) மற்றும் பாலிபினைல்(Polyphenols) கிடைக்கிறது. மேலும் மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் (Fiber) உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்கி, இதய நோய்(Heart disease) நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

எலும்புகளின் வலிமை

மாதுளையில் நமது உடலுக்குத் தேவையான என்சைம்கள்(Enzymes) அதிகளவில் உள்ளது. இவை நமது  எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. மாதுளை ஜூஸானது எலும்புத் தேய்மானத்திலிருந்து(Bone Degeneration) பாதுகாக்கிறது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆகியவை உறுதியாக இருக்க மாதுளை உதவுகிறது. எலும்பு முறிவு(Bone Fracture), மூட்டுவலி(Joint Pain) போன்றவை வராமல் இருக்க தினம் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.

சர்க்கரை நோய்

மாதுளையில் குளுக்கோஸ்(Glucose) குறைந்த அளவே உள்ளது. மேலும் அதிக அளவு பிரக்டோஸ்(Fructose) இருக்கிறது. மாதுளை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோய் (Diabetes) எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

மலச்சிக்கல்

பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்க மாதுளை பயன்படுகிறது. மாதுளம் பழம் மலச்சிக்கலைப்(Constipation) போக்கும் ஆற்றல் கொண்டது. வறட்டு இருமல் (Dry Cough) உள்ளவர்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதம். மாதுளைக்கு வயிற்றுப்புண் ஆற்றும் குணம் உண்டு. மேலும் மலத்தில் ரத்தம் வருதல், சீதபேதி (Dysentery) போன்ற நோய்களுக்கு மாதுளம் பிஞ்சு ஒரு நல்ல அருமருந்து.

நினைவாற்றல்

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி(Vitamin c) அதிகளவு உள்ளது. இது இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் இரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் அவதிப்பட்டுவந்தால் மாதுளம் பழம் சாப்பிடலாம். அளவுக்கு மீறிய போதையில் மயங்கி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்தால் போதை தெளியும்.

அதிகமான உதிரப்போக்கு

மாதுளம் பூச்சாறு மற்றும் அருகம்புல் சாறு இரண்டையும் சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிகமான உதிரப்போக்கு சரியாகும். மேலும் மாதுளம் பூ 15 கிராம் எடுத்து அதனுடன் 25 கிராம் சர்க்கரை(Sugar) சேர்த்து நன்றாக அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களை தொல்லைப்படுத்தும் அதிக வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நிவர்த்தியாகும்.

பசியின்மை

சரியான நேரத்துக்குப் பசி எடுக்காமல் இருப்பது தான் நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணம். இந்த பசியின்மையானது(Appetite) குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிக அதிகளவில் ஏற்படும். மாதுளை இதற்கு நல்ல ஒரு தீர்வு.  மாதுளைக்குப் பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு. குழந்தைகளுக்கு தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் கொடுத்து வந்தால், நேரத்துக்குப் பசி எடுக்கும்.

உடல் எடை குறைப்பு

மாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உடலைச் சுத்தம் செய்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தினமும் மாதுளை பழச்சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி, உடல் எடையைக்(Weight Loss) குறைக்கலாம்.

மன அழுத்தம்

குயின் மார்க்கரேட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக்(Mental Stress) குறைக்கலாம். எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும் மாதுளை ஜுஸைக் குடித்தால், உடனே மன அழுத்தம் நீங்கி, உடலுக்குப் புது தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

சூரியக் கதிர்வீச்சு

அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சினால் சருமம் கருமையடைவதோடு, அல்ட்ரா வைலட் கதிர்களால் பாதிக்கப்படக்கூடும். மாதுளைக்கு இதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உண்டு. மாதுளையானது கதிர்வீச்சினால் உண்டாகும் சரும சேதத்தைப் போக்கும். கதிர்வீச்சு பாதிப்புகளைப் போக்கி, புற்றுநோய்(Cancer) வராமல் தடுக்க உதவுகிறது.

இதையும் படிங்க: பூண்டின் மருத்துவ குணங்கள்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment