பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்

Pistachio Benefits | பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்

பிஸ்தா பருப்பை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. பிஸ்தா பருப்பில் 30 வகையான வைட்டமின்கள்(Vitamins), மினரல்கள், தாது உப்புக்கள், பைடோ ஊட்டச்சத்துகள்(Phyto Nutrients) உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன. இந்த பதிவில் பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள் (Pistachio Benefits) பற்றி காணலாம்.

இதையும் படிங்க: நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

இதய நோய்
பிஸ்தா பருப்பு இதய நோய்(Heart disease) ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு(Heart attack) ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு. பிஸ்தா பருப்பு நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நமது உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய்
பிஸ்தா பருப்பு புற்றுநோயால்(Cancer) ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்(Lung Cancer) உள்ளிட்ட பிற வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
உடல் எடை குறைப்பு
பிஸ்தா பருப்பில் குறைந்த அளவு கலோரி(Calorie) உள்ளது. மேலும் இதில் குறைத்த அளவு கொழுப்பு(Cholesterol) மற்றும் அதிக அளவு நார்சத்து(Fibre Nutrition) உள்ளது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்ற உணவுகளை குறைத்து பிஸ்தாவை எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தா நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை(Bad Cholesterol) குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இரத்த சுத்திகரிப்பு
இரத்த சுத்திகரிப்பில்(Blood purification) பிஸ்தா முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் ஹிமோகுளோபின் உற்பத்தியில்(Production of Hemoglobin) முக்கிய பங்காற்றுகிறது. இரத்தத்தில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜனை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வெள்ளையணுக்கள் உற்பத்தி
பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6(Vitamin B6) அதிகளவு உள்ளது. வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த செல்களுக்கு ஆக்சிஜனை அளிக்கிறது. சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து நிணநீர் மற்றும் மண்ணீரலை பராமரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நினைவாற்றல்அதிகரிப்பு
பிஸ்தா பருப்பிற்கு நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தினமும் மாலை பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.
தோல் நோய்கள்
பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள்(Skin related diseases) ஏற்படுவதில் இருந்து தடுக்கலாம். பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் ஈ-யானது(Vitamin E) நமது தோல் புறஊதாக் கதிர்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய்(Skin Cancer) ஏற்படுவதில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
கண் பார்வை குறைபாடு
பிஸ்தா பருப்பு தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் நோய்கள்(Eye diseases) ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு. மேலும் இது கண்புரை நோய்(Cataracts) ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது. பிஸ்தா நமது கண்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கிறது.

இதையும் படிங்க: பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment