பெண்களை தாக்கும் எலும்பரிப்பு நோய்

Osteoporosis in Women | பெண்களை தாக்கும் எலும்பரிப்பு நோய்

மார்பகப் புற்றுநோய்(Breast cancer), இதய நோய்(Heart disease) மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘பெண்களுக்கு எலும்பரிப்பு நோய்(Osteoporosis in Women)’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கியமாகவே இருக்கும். பொதுவாகவே மாதவிடாய்(Menopause) நின்ற மகளிர்க்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

இதனால் பெண்களுக்கு எலும்பு முறிவு(Bone fracture) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் எலும்பரிப்பு நோய்(Osteoporosis) எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு ஏற்படுவது இல்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினாலோ அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினாலோ கூட எலும்பு முறிவு(Bone fracture) ஏற்படுகிறது.

பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய்(Breast cancer), இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்(Osteoporosis)’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிடாய்(Menopause) நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்பு அடைவதும், பலகீனம் அடைவதும் முக்கிய காரணம் ஆகும்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு (Menstruation) நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது.

இந்த வேகத்தில் பெண்கள் தங்களது 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகின்றனர். இந்நிலையில் எலும்பு முறிவு என்பது வெகு சுலபமாக அவர்களுக்கு ஏற்படுகிறது.

எலும்பு என்பது கல் போன்று உறுதி கொண்டது என நாம் அனைவரும் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு உட்பட்டு சுண்ணாம்புச்சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்(Estrogen)’ அளவு குறைவதும் எலும்பரிப்பு நோய்க்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச்சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை. மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து என்பது அவசியமான ஒன்று.

தடுக்கும் முறைகள்
  1. நடைப்பயிற்சி(Walking) ஒரு சிறந்த பலனை அளிக்கும்.
  2. சுண்ணாம்புச்சத்து(Calcium) சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.
  3. ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்.
  4. உணவில் வைட்டமின் D(Vitamin D) சரியான அளவில் இருக்க வேண்டும்.
  5. போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை.
  6. மாதவிலக்கு(Menstruation) சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு(Prohibited menstruation) உள்ள பெண்களும் மருத்துவரிடம் சென்று அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
  7. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment