பெண்கள் உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய இயற்கை வழிகள்

Bra Strap Marks | பெண்கள் உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள்

பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் உள்ளாடைகள்(Bra) அணியும் இடத்தில் பிராவில் உள்ள எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். பெண்கள் உள்ளாடைகள்(Bra) அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது என்பது இயல்பான ஒன்று தான். எனினும் பெரும்பாலான பெண்கள் இந்த தழும்புகளை விரும்புவது இல்லை. மேலும் இந்த தழும்புகளால் பெண்களின் மார்பகமானது தனது அழகை இழந்து விடுகிறது. பெண்கள் உள்ளாடை(Bra) போடுவதால் ஏற்படும் தழும்புகள் மறைய(Tips to Remove Bra Strap Marks) கீழ்கண்ட இயற்கை வழிகளை பின்பற்றலாம்.

இதையும் படிங்க: பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

Tips to Remove Bra Strap Marks | பெண்கள் உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய இயற்கை வழிகள்

  • ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளி தேன் இரண்டையும் நன்றாக கலந்து கருப்பு கோடுகள்(Bra Strap Marks) உள்ள இடத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் காயவிட்டு பின்னர் அந்த இடத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.
  • ஆரஞ்சு தோலை வெயிலில் நன்றாக காய வைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆரஞ்சுப் பொடியுடன் தேன் கலந்து அதை பேஸ்ட் போல் நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை கருப்புக் கோடு(Bra Strap Marks) உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
  • ஒரு டீஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி அளவு எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கருப்புக் கோடு(Bra Strap Marks) உள்ள இடத்தில் தடவலாம். மேலும் பெண்கள் தங்களின் உடலில் தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம்.
  • முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக குழைத்து கறுப்புக் கோடுகள்(Bra Strap Marks) உள்ள இடத்தில் தடவ வேண்டும். சில நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.
  • வெள்ளரிக்காய்(Cucumber) மற்றும் கற்றாழை(Aloe Vera) இரண்டையும் பேஸ்ட் போல் நன்றாக குழைத்து கருப்புக் கோடு(Bra Strap Marks) உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
  • பேக்கிங் சோடாவை தண்ணீரில் குழைத்து கருப்புக் கோடுகள்(Bra Strap Marks) உள்ள இடத்தில் தடவலாம்.
  • இரவு தூங்கும் முன்னர் கருப்புக் கோடுகள்(Bra Strap Marks) உள்ள இடத்தில் ஆலிவ் ஆயில்(Olive Oil) கொண்டு நன்றாக மசாஜ் செய்து காலை எழுந்த பின்னர் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

மேற்கண்ட வழிமுறைகள் பெண்கள் உள்ளாடை(Bra) போடுவதால் ஏற்படும் தழும்புகள் மறைய(Tips to Remove Bra Strap Marks) உதவுகிறது. ஆனால் இதனை இந்த கறுப்புக் கோடுகள்(Bra Strap Marks) மறையும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு முறை மட்டும் செய்தால் பலன் கிடைக்காது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment