பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

Remedies for Sagging Breast | தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

பிரசவத்துக்கு பின்னர் அனைத்து பெண்களுக்கும் மார்பகங்கள் தளரத்தான் செய்யும். இது இயல்பான ஒன்றுதான். குழந்தைகள் பால் குடிப்பதால் மார்பகத்தில் ஏற்படும் மாற்றம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயது அதிகரிப்பு போன்ற காரணங்களால் மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். இதற்கு துணையாக மார்பகங்களைத் தாங்கிப் பிடிக்க பெண்களின் உள்ளாடை(Bra) அவர்களுக்கு ஓரளவுக்கு உதவும். எனவே சௌகரியமான உள்ளாடையை அணிவது மிகவும் முக்கியம். பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்திய குறிப்புகள்(Remedies for Sagging Breast) உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

ஏன் மார்பகங்கள் தளர்வடைகின்றன?

மார்பகங்கள் தளர்வடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமடைகிறது. மேலும் பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக மார்பகங்களில் பால் சுரக்கும். பால் சுரப்பு காரணமாக மார்பகங்கள் பெரிதாகின்றன. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர், தாய்ப்பால் சுரப்பது நிற்கும். அதனால் மார்பகங்கள் தளர்வடைய ஆரம்பிக்கும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்வதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

இதையும் படிங்க: பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

மார்பகங்கள் தளர்வதை தடுப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்கள் மாதம் 2-3 கிலோ என மெதுவாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம். ஒரே மாதத்தில் அதிகமாக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால் விரைவில் மார்பகங்கள் தளர்ந்துவிடும்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதை மெதுவாக குறைக்க வேண்டும். அதிக குண்டாக இருந்தால் மார்பகங்கள் பெரிதாக மாறிக்கொண்டே வரும். மார்பகங்கள் விரைவில் தளர்ந்தும் போகும். எனவே உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

மிகவும் முக்கியமாக உள்ளாடை(Bra) தேர்வில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். சரியான அளவில் உள்ளாடை(Bra) அணிவது மிகவும் நல்லது. இரவில் உறங்கும் போது மட்டும் உள்ளாடை அணிவதை தவிர்க்கலாம். இயற்கை முறையில் பிரசவத்திற்கு பின்னர் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக(Remedies for Sagging Breast) மாற்றலாம்.

மார்பகம் தளராமல் இருக்க இயற்கை வழிகள்(Natural Remedies for Sagging Breast)

பிரசவத்திற்கு பின்னர் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக(Remedies for Sagging Breast) மாற்ற கீழ்க்காணும் வழிமுறைகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

ஐஸ் மசாஜ்

ஐஸ் மசாஜ் செய்வதால் மார்பகத்தில் உள்ள தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவுகிறது. 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து கட்டி ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் என இரு மார்பகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால் மார்பகங்கள் மரத்து விடும். எனவே ஒரு மார்பகத்திற்கு ஒரு நிமிடம் மசாஜ் செய்தால் போதும். மசாஜ் செய்வதை சர்குலர் மோஷனாக செய்ய வேண்டும்.

ஐஸ் மசாஜ் செய்து முடித்தவுடன் மார்பகத்தை நன்கு உலர்ந்த, சாஃப்டான துணியால் நன்றாக துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் உள்ளாடையை(Bra) அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் 30 நிமிடங்களுக்கு சாய்ந்து உக்கார வேண்டும். தினமும் இதுபோல் இரண்டு முறை செய்ய வேண்டும். மூன்று மாதத்தில் மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயில் மசாஜ்

ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதற்கு உள்ளங்கையில் தேவையான அளவு ஆலிவ் ஆயில் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் உள்ளங்கையை நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். இப்பொது மார்பகத்தின் கீழ் இருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதால் மார்பகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செயலற்ற செல்கள் புத்துயிர் பெறும். இதனால் தளர்வடைந்த மார்பகம் டைட்டாக மாறும். ஆலிவ் ஆயில் மசாஜை வாரத்திற்கு 4 முறை செய்யலாம்.

குறிப்பு:

மசாஜ் செய்வதற்கு ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம். இவையும் நல்ல முடிவுகளைத் தரும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

ஹெர்பல் மாஸ்க்

ஹெர்பல் மாஸ்க் செய்வதற்கு சிறிய வெள்ளரிக்காயின் ப்யூரி, ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றைக் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை இரண்டு மார்பகங்களிலும் பூசி 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். 30 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹெர்பல் மாஸ்க் போடலாம். இந்த ஹெர்பல் மாஸ்க் போடுவதால் தளர்ந்த மார்பகங்கள் டைட்டாகும்.

வெள்ளை முட்டை மாஸ்க்

வெள்ளை முட்டை மாஸ்க் செய்வதற்கு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதனுடன் வெங்காய ஜூஸ் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை இரண்டு மார்பகங்களிலும் நன்றாக தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த வெள்ளை முட்டை மாஸ்க் போடலாம்.

இதையும் படிங்க: தொப்பையை குறைக்க டிப்ஸ்

மாதுளை விதை எண்ணெய் மசாஜ்

தளர்வடைந்த மார்பகம் டைட்டாக மாதுளை விதை எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்யலாம். மாதுளை விதை எண்ணெய் தேவையான அளவு எடுத்து மார்பகத்தின் கீழ் இருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் 10 நிமிடங்கள் வரை செய்யலாம். தினமும் ஒருமுறை இந்த மாதுளை விதை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தளர்ந்த மார்பகங்கள் டைட்டாகும்.

வெந்தயம் மாஸ்க்

வெந்தயம் மாஸ்க் செய்வதற்கு ¼ கப் அளவு வெந்தயம் எடுத்து நன்றாக ஊறவைக்க வேண்டும். வெந்தயம் நன்றாக ஊறிய பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து திக்கான பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை இரு மார்பகங்களிலும் பூசி 10 நிமிடம் வரை விட வேண்டும். பின்னர் இளஞ்சூடான நீர் கொண்டு மார்பகங்களை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை வெந்தயம் மாஸ்க் கொண்டு செய்யலாம். இதனால் தளர்ந்த மார்பக தசைகள் டைட்டாகும்.

கற்றாழை ஜெல் மசாஜ்

கற்றாழை ஜெல் மசாஜ் செய்வதற்கு கற்றாழை ஜெல் தேவையான அளவு எடுத்து மார்பகத்தின் கீழ் இருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் சர்குலர் மோஷனாக செய்ய வேண்டும். இதை 10 நிமிடங்கள் வரை செய்யலாம். வாரத்திற்கு 4 முறை இந்த கற்றாழை ஜெல் மசாஜ் செய்யலாம். இதனால் தளர்ந்த மார்பகங்கள் டைட்டாகும்.

இதையும் படிங்க: எளிய முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

நினைவில் கொள்ள வேண்டியவை

  • மேலே குறிப்பிட்டுள்ள மசாஜ் செய்பவர்கள் அதிகமான டயட்டில் இருக்க கூடாது.
  • நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீச்சல் அடிக்கலாம்.
  • ஜாகிங், ரன்னிங் போன்றவற்றை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • வாக்கிங் செல்லும் பொது சரியான டைட்டான உள்ளாடை அணிந்துகொள்ள வேண்டும்.
  • உட்காரும் போது நேராக நிமிர்ந்து உக்கார வேண்டும்.
  • நாடாகும் போது நிமிர்ந்து நடக்க வேண்டும். கூன் போட்டு நடக்கக்கூடாது.
  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • உள்ளாடை(Bra) தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான அளவில் உள்ளாடை(Bra) அணிய வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment