மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

Menstruation Health Tips | மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

பெண்கள் மற்ற நாட்களை காட்டிலும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. இந்தப்பதிவில் ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்(Menstruation Health Tips) பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முன்னோர் காலத்தில் மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் குளிக்கக் கூடாது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.ஏனென்றால் முன்பு பெரும்பாலும் எல்லோரும் குளங்களில் தான் குளிப்பார்கள். சுகாதாரத்தைக் காரணம் காட்டி மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் குளிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம்.

இதையும் படிங்க: அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் ஒருவேளைக்கு பதிலாக இருவேளை குளிப்பது அவர்கள் உடலைச் சுத்தமாக்குவதுடன், மனதிற்கும் நிம்மதி தருகிறது. மேலும் இது மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலிகளையும் குறைக்க உதவுகிறது. மாதவிலக்கு காலகட்டத்தில் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் மேலும் மன அழுத்தமின்றி இருக்க வேண்டும்.

ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ சீரான இடைவெளியில் நாப்கின்களை மாற்ற வேண்டும். சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்பை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். குறிப்பாக அந்தரங்க பகுதியில் சோப் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தொடை மற்றும் அந்தரங்க உறுப்பை எப்பொழுதும் ஈரமின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

பெண்களின் பிறப்பு உறுப்புக்கு இயல்பிலேயே தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை உண்டு. எனவே பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்ய தனியாக சோப் உபயோகிக்கத் தேவையில்லை.

ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தும் நாப்கின்கள் ஒரு சிலருக்கு சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தகூடும். சிலருக்கு இந்த நாப்கின்களால் இன்பெக்சன் கூட ஏற்படும்.

நாப்கின்கள்

உபயோகித்து தூக்கியெறியக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்கள், டாம்பூன்கள், மென்ஸ்ட்ருவல் கப் என எதை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கு ஏற்ப உபயோகிக்கலாம்.

முக்கியமாக எந்த வகையான நாப்கின்கள் உபயோகித்தாலும் அதில் அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்கள் மற்றும் கப் போன்றவற்றை முறையாகச் சுத்தப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறை நாப்கினை கண்டிப்பாக மாற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை லேசான உப்பு கலந்த குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.

துணி நாப்கின்களை வெந்நீரில் ஊறவைத்தால் ரத்தக் கறைகள் அப்படியே படிந்து அது நிரந்தர கறையாகிவிடும். நன்றாக ஊறியதும் அதை நன்கு அலசி வெயிலில் உலர்த்த வேண்டும். சூரிய ஒளியானது இயற்கையான கிருமிநாசினி. இது துணி நாப்கின்களில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கிவிடும்.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

மாதவிலக்கு காலத்தில் நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை உபயோகிப்பதில் இருக்க வேண்டிய அக்கறை பயன்படுத்திய பின்னர் அதை அப்புறப்படுத்துவதில் அதிகளவு  இருக்க வேண்டும். நாப்கின்களை எக்காரணம் கொண்டும் டாய்லெட்டினுள் போட்டு ஃப்ளஷ் செய்தல் கூடாது.

உபயோகித்த நாப்கின்களை தேவையில்லாத பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். மேலும் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். உபயோகித்த நாப்கின்கள் நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் இருந்தால் அது கிருமித் தொற்றை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

நாப்கின்கள் பயன்படுத்துவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி காரணமாக கடுமையான அரிப்பு ஏற்பட்டு சருமம் சிவந்து புண் கூட ஏற்படலாம். அலர்ஜி ஏற்பட்டால் அதற்க்கான காரணத்தைச் சரும மருத்துவரிடம் கேட்டு தெரிந்து அதற்கேற்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment