மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

Home Remedies to increase Breast Size | மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் வருத்தப்படும் முக்கியமான ஒரு விஷயம், மார்பக அளவு(Breast size) சிறியதாக இருப்பது. மார்பக அளவு சிறியதாக உள்ள பெண்களுக்கு, தாங்கள் செக்ஸியாக காணப்படவில்லை என்ற ஒரு கவலை எப்பொழுதும் இருந்து வருகிறது. பல்வேறு பெண்கள் பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் அழகு என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் அழகு என்பது இல்லை. வீட்டு வைத்தியம் மூலம் மார்பகங்களின் அளவை(Home Remedies to increase Breast Size) அதிகரிக்கலாம். இது எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

சிறிய மார்பகங்கள்

சிறிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் வேண்டும் என்ற கவலை. ஆனால் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்குத் தான் தெரியும், பெரிய மார்பகங்கள் எவ்வளவு சிரமம் கொடுக்கும் மற்றும் அதனால் எவ்வளவு பெரிய இடையூறுகள் ஏற்படும் என்று. பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களால் அவர்கள் விரும்பும் உடைகளை எளிதில் அணிய முடியாது. மேலும் பெரிய மார்பகம் கொண்ட பெண்கள் பல சமயங்களில் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

இருப்பினும், சிறிய மார்பகங்கள்(Small breasts) பெண்களின் மனதை நிச்சயமாக கஷ்டப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஏனெனில் சிறிய மார்பகம் கொண்டு தங்களின் வாழ்க்கை துணையை தங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை என்ற எண்ணம் கூட ஒரு சில பெண்களுக்கு ஏற்படும்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

தொங்கும் மார்பகங்கள்

சிறிய மார்பகங்களால் சில பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சில பெண்கள் தளர்ந்து தொங்கும் மார்பகங்களால்(Hanging Breasts) கஷ்டப்படுகின்றனர். கர்ப்பம்(Pregnancy) மற்றும் தாய்ப்பால்(Breastfeeding) கொடுப்பதால், மார்பக திசுக்கள்(Breast tissues) விரிவடைந்து, இளம் வயதிலே மார்பகங்கள் அழகை இழக்கும் வகையில் தளர்ந்து தொங்கி அசிங்கமாக காட்சியளிக்கின்றது. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மார்பகங்கள் தளர்ந்து அசிங்கமாக தொங்கிக் காணப்படுவதால், அவர்கள் இளம் வயதிலேயே தங்களின் இளமையை இழந்துவிட்டதாக எண்ணி வருத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இயற்கை வைத்தியம்

மார்பகங்களின் அழகை அதிகரிக்க மற்றும் மார்பக அளவை பெரிதாக்க பல்வேறு சிகிச்சைகள்(Breast Size Therapy) உள்ளன. இந்த சிகிச்சைகள் விலை அதிகமானது மற்றும் வலிமிக்கது. மேலும் இந்த சிகிச்சைகள் மார்பகங்களில் அசிங்கமாக தழும்புகளை ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் மூலம் மார்பகங்களின் அழகு மற்றும் அளவை(Home Remedies to increase Breast Size and Beauty) அதிகரிக்கலாம். மார்பகங்களின் அளவைப் பெரிதாக்க மற்றும் அழகாக்க அற்புதமான ஆலிவ் ஆயில் சிகிச்சை உதவுகிறது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

தேவையான பொருட்கள்

  • ஆலிவ் ஆயில்(Olive Oil) – 3 டிஸ்பூன்
  • ரோஸ்மேரி நறுமண எண்ணெய்(Rosemary Aromatic Oil) – 3 டிஸ்பூன்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில்(Olive Oil) வைட்டமின் ஈ(Vitamin E) அதிகளவு உள்ளது. இது மார்பகத் திசுக்கள் (Breast tissues) மற்றும் மார்பகத்தில் உள்ள செல்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதன் மூலம் உங்கள் மார்பகங்கள் இழந்த அழகை மீண்டும் பெற உதவுகிறது.

ரோஸ்மேரி நறுமண எண்ணெய்

ரோஸ்மேரி நறுமண எண்ணெயில்(Rosemary Aromatic Oil) ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ(Vitamin E) போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த ரோஸ்மேரி நறுமண எண்ணெய் கொண்டு மார்பகப் பகுதியை மசாஜ் செய்வதால், புதிய மார்பக செல்களின் உற்பத்தி தூண்டப்பட்டு, மார்பகங்கள் சிக்கென்றும், அழகாகவும் மாறும்.

பயன்படுத்தும் முறை
  1. ஒரு சிறிய பௌலில் ஆலிவ் ஆயில்(Olive Oil) மற்றும் ரோஸ்மேரி நறுமண எண்ணெய்(Rosemary Aromatic Oil) ஆகிய இரண்டையும் சமஅளவில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் இந்த எண்ணெய் கலவையை மார்பக பகுதியை சுற்றி நன்றாக தடவ வேண்டும்.
  3. பின்னர் கைகளை கொண்டு மென்மையாக மார்பகங்களை 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
  4. 2 மாதங்கள் வரை தினமும் இவ்வாறு செய்து வந்தால், மார்பகங்கள் தளர்ந்து தொங்குவது நீங்கி, அழகாகவும் சிக்கென்றும் மாறும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment