தாய்ப்பால் சேமிக்க உதவும் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துவது எப்படி?

What is Breast Pump? | பிரெஸ்ட் பம்ப் என்பது என்ன?

பெரும்பாலான பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப்(Breast Pump) பற்றித் தெரிந்திருக்கும். பிரெஸ்ட் பம்ப் எப்படி பயன்படுத்துவது(How to Use Breast Pump)?  பிரெஸ்ட் பம்ப் மூலமாக தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? சேகரித்த தாய்ப்பாலை எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். தாய்ப்பாலை சேமிக்கும் தாய்மார்களுக்கும் மற்றும் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கும் இந்த பதிவு மிகவும் உதவும்.

இதையும் படிங்க: வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க டிப்ஸ்

தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். தாய்ப்பால் கொடுப்பது அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும்.

இந்த தாய்ப்பால் கொடுப்பதை எல்லா சூழ்நிலையிலும் தாய் தனது குழந்தைக்கு செய்ய முடியாமல் போகலாம். ஒரு சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். இதனால் அவர்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த பிரச்சினைக்கு பிரெஸ்ட் பம்ப்(Breast Pump) ஒரு நல்ல தீர்வு.

Types of Breast Pump | பிரெஸ்ட் பம்ப் வகைகள்

பிரெஸ்ட் பம்பில் இரண்டு வகைகள் உள்ளன.

  • மேனுவல் பிரெஸ்ட் பம்ப்(Manual Breast Pump)
  • எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப்(Electronic Breast Pump)

மேனுவல் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துபவர்கள் மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுக்க வேண்டும்.

எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்துபவர்கள் இந்த கருவியை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில் பிளக் சொருகி ஆன் செய்ய வேண்டும். பின்னர் இந்த எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது ஒரு தானியங்கி கருவி.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எந்த பிரெஸ்ட் பம்ப் சிறந்தது?

Manual Breast Pump | மேனுவல் பிரெஸ்ட் பம்ப்

மேனுவல் பிரெஸ்ட் பம்ப் எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப்பை விட விலை குறைவு. மேனுவல் பிரெஸ்ட் பம்பில் நீங்கள் உங்கள் கைகளால் அழுத்தி தாய்ப்பாலை வெளியே எடுக்க வேண்டும். மேனுவல் பிரெஸ்ட் பம்ப் மூலமாக தாய்ப்பாலை சேமிக்க 10-40 நிமிடங்கள் வரை ஆகும். ஏனெனில் நீங்கள் கைகளால் அழுத்தி பால் எடுக்க வேண்டி இருக்கும்.

Electronic Breast Pump | எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப்

எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் விலை சற்று அதிகம். ஏன் இந்த விலை வித்தியாசம் என்றால் அதுவே மார்பகத்தை அழுத்தி பால் எடுக்கும் வேலையை செய்கிறது.  எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாக தாய்ப்பாலை சேமிக்க 10 – 15 நிமிடங்கள் தான் ஆகும். தாய்மார்கள் தங்களின் வசதியைப் பொறுத்து இந்த இரண்டு கருவிகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

பிரெஸ்ட் பம்ப் ஏன் தேவைப்படுகிறது?

பிரெஸ்ட் பம்ப் என்பது அலுவலகம் செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும் ஒரு கருவி ஆகும். தாயானவள் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை சேகரித்து வைத்து விட்டால் போதும் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலை கொடுக்கலாம்.

ஒரு சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். சரியாகவும் தாய்ப்பால் குடிக்காது. குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே  இருக்கும். தாயானவள் பிரெஸ்ட் பம்ப் மூலமாக தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். மேலும் தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ அல்லது மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.

பிரெஸ்ட் பம்பை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி 2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலை சேமித்து வைக்கலாம். எப்படி தாய்ப்பால் தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறீர்களோ அதுபோல பிரெஸ்ட் பம்பை தொடர்ந்து பயன்படுத்தி தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.

இதையும் படிங்க: மார்பகத்தில் பால் கட்டுவதை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

தாய்ப்பாலை எவ்வளவு நாள் வரை சேமிக்கலாம்?

ஃபிரிட்ஜ் இல்லாமல், வெளியில் தாய்ப்பாலை சேமித்து வைக்க நினைக்கும் பெற்றோர் கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேகரித்து சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். வீட்டில் அறை வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்க முடியும். அதற்கு மேல் வெளியில் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

இரவில் குழந்தைக்கு கொடுக்க அல்லது அடுத்த நாளுக்கு கொடுக்க தாய்ப்பால் சேகரிக்க வேண்டும் என்றால் பிரெஸ்ட் பம்ப் மூலமாக சேகரித்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஃபிரிட்ஜில் இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும். தாயானவள் ஒரு வாரம் வரை எதாவது அலுவல் காரணமாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், பிரெஸ்ட் பம்ப் மூலம் சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்கலாம். ஃப்ரீசரில் வைத்த தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். 10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பது நலம்.

இதையும் படிங்க: பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

சேமித்த தாய்ப்பாலை எப்படி பயன்படுத்த வேண்டும்?

தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைத்திருந்தால், அதை ஃபிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்துவிட்டு தாய்ப்பால் அறையின் வெப்பநிலைக்கு வந்த பின்னரே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குளிர்ச்சியோ அல்லது சூடாகவோ இருக்க கூடாது. தாய்ப்பால் எப்படி அறை வெப்ப நிலையில் இருக்கிறதோ அதே போல சேமித்து வைத்தப் பாலும் அறை வெப்ப நிலைக்கு மாறிய பிறகே கொடுக்க வேண்டும்.

சாதாரண நீரில், அல்லது இளஞ்சூடான நீரில் சேமித்து வைத்த பாலை வைத்து குளிர்ச்சியைத் தணித்து அறை வெப்பநிலைக்கு தாய்ப்பாலை கொண்டு வந்து பின்னரே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதற்கு 20-40 நிமிடங்கள் கூட ஆகும். முக்கியமாக எக்காரணம் கொண்டும் தாய்ப்பாலை சூடு செய்யக் கூடாது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment