குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

How to Stop Breastfeeding? | குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

தாய்மார்கள் பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. 6 மாதத்துக்கு பின்னர் கூடுதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். 6 மாதத்துக்கு பின்னர் உடனே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு அதற்கு பதில் வேறு ஏதாவது உணவை கொடுக்கலாமா? நிச்சயம் கூடாது. தாய்மார்கள் முடிந்தவரை தங்களின் குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?(How to Stop Breastfeeding) என இந்த பதிவில் காணலாம்.

இதையும் படிங்க: வெளியிடங்களில் தாய்ப்பால் கொடுக்க டிப்ஸ்

6 மாதங்கள் வரை தாய்ப்பால் 

தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அனுமதித்தால் மட்டுமே 5 – 6வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். 6வது மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பால் உடன் கூடுதல் உணவு கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் உடன் கூடுதல் உணவு கொடுத்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி சீராக அதிகரிக்கும். குழந்தையானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் எளிதில் கிடைக்கும். எந்தவொரு நோயும் எளிதில் தாக்காது.

தாய்ப்பாலை நிறுத்துவதை எப்போதிலிருந்து தொடக்கலாம்?

குழந்தைக்கு ஒரு வருடம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவு கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும். திட உணவு என்றவுடன் எடுத்த உடன் சாம்பார் சாதம் கொடுக்க கூடாது.

திட உணவு என்பது கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, மற்றும் திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது. இந்த வகையான உணவுகளை 6வது மாதத்தில் இருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கஞ்சி, கூழ், ப்யூரி, கீர், ஸ்மூத்தி, ஜூஸ் மற்றும் சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைக்கு களி உணவுகளைக் கொடுக்கலாம். நன்கு குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றைக் கொடுக்கலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைக்கு கொடுக்கும் உணவானது அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் கொடுக்க வேண்டும். மேலும் கொடுக்கும் உணவானது சுவையாக அதேநேரம் சுகாதாரமாக இருப்பது மிகவும் முக்கியம்.

தாய்ப்பால் நிறுத்த என்ன செய்யலாம்?

தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஒரே நாளில் உடனே நிறுத்தி விடக் கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரும் போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத நேரத்தில் திட அல்லது திரவ உணவுகள் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டு வந்து, இறுதியில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பின்னர் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒன்றரை வயது முடிந்த பின்னர் இருமுறை தாய்ப்பால் கொடுத்தாலும் கொடுக்கும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தையின் கவனத்தை விளையாட்டில் செலுத்த வேண்டும்.

குழந்தைக்கு 2 வயது முடியும் நேரத்தில் இருவேளைக்கு பதிலாக ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். பின்னர் ஒரு நாளைக்கு ஒருமுறை கொடுப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுக்கலாம். பின்னர் 5 நாட்கள் என்பதை 3 நாட்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு 3 நாட்கள் தாய்ப்பால் கொடுப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வாரம் ஒரு முறை மட்டும் கொடுப்பது போல மாற்ற வேண்டும். பின்னர் அதையும் குறைத்து அப்படியே நிறுத்திவிட வேண்டும். இப்படி படிப்படியாக குறைப்பது குழந்தைக்கு நல்லது.

எந்த நேரத்தில் தாய்ப்பால் தர கூடாது?

  • தாய் மயக்கநிலையில் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
  • தாய் மனநோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்பே தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
  • தாய் தொற்று நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் தாய்க்கு உள்ள நோய் குழந்தைக்கும் பரவும்.
  • மார்பக புற்றுநோய், மார்பகத்தில் வெடிப்பு, மார்பகத்தில் ரத்த கசிவு மற்றும் மார்பகத்தில் புண் இருந்தால் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.
  • தாய் காச நோய் மற்றும் டைபாய்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment