இளநரை நீங்க இயற்கை வழிமுறைகள்

How to Prevent White Hair? | இளநரை வராமல் எப்படி தடுக்கலாம்?

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை இளநரை தான். தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட இந்த இளநரை(White Hair) பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு(Malnutrition) மற்றும் சுற்றுசூழல் மாசு போன்றவை தான். இந்த பதிவில் இளநரை வராமல் தடுக்கும் (Prevent White Hair) வழிமுறைகளை பற்றி காணலாம்.

நமது முடியின் வேர்ப்பகுதியில் உறை ஒன்று இருக்கும். அதில் மெலானோசைட்ஸ் என்கிற செல்கள் இருக்கிறது. இந்த செல்கள் தான் நமது முடிக்கு கருமை நிறம் அளிக்கும் “மெலானின்(Melanin)’ என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலானின் குறைபாட்டால் தான் இளநரை(White Hair) உருவாகிறது.

இதையும் படிங்க: கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

சிலருக்கு பரம்பரை வழியாக இளநரை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தலையில் பொடுகு அதிகளவு இருந்தால் அவை முடியின் வேர்ப்பகுதியில் சென்று அடைத்து விடும். இதனால் முடிக்கு நிறமளிக்கும் மெலானின்(Melanin) உற்பத்தி குறைந்து நரைமுடி வரும் வாய்ப்பு ஏற்படும்.

ஹார்மோன் குறைபாடு(Hormonal deficiency), புரதசத்து குறைபாடு(Protein deficiency), தூக்கமின்மை(Insomnia), ரத்தசோகை(Anemia), டென்ஷன், மனஅழுத்தம்(Mental stress), சுற்றுசூழல் மாசு, தூசு, முடி வறட்சி(Hair dryness), முடியில் எண்ணெய் பசை இல்லாமல் இருத்தல், முடி சுத்தமாக இல்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை ஏற்படுகிறது.

இயற்கை வழிமுறைகள்

 1. கறிவேப்பிலை(Curry leaves), மருதாணி(Henna) மற்றும் செம்பருத்தி(hibiscus) ஆகியவற்றை சமஅளவில் எடுத்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் நன்றாக அலசி குளிக்க வேண்டும். இதனால் இளநரை(White Hair) மறைந்து முடி கருமையாக மாறும்.
 2. கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் நன்றாக அலசி குளிக்கலாம். மேலும் இதனுடன் கீழாநெல்லி சேர்த்து பயன்படுத்தலாம்.
 3. பச்சைத் துளசி இலையை(Basil leaf) கைப்பிடி அளவு எடுத்து அதை சிறிதளவு தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் இளஞ்சூட்டில் இந்த நீரை கொண்டு முடியின் வேர் முதல் நுனி வரை அலசி வந்தால் இளநரை(White Hair) நீங்கி முடி கருமையாக மாறும்.
 4. தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை(Curry leaves) பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் கருவேப்பிலையை தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
 5. கரிசிலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி போன்ற கீரைவகைகளை உணவில் சேர்த்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். மேலும் இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
 6. முளைக்கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் இளநரை படிப்படியாகக் குறைவதை காணலாம்.
 7. இரும்புச் சத்து மற்றும் புரோட்டீன்(Protein) போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் இளநரை ஏற்படுவதை தடுக்கலாம்.
 8. இஞ்சியை(Ginger) தோல் நீக்கி தேனுடன் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இளநரை உண்டாவதை தடுக்கலாம்.
 9. சீரகம்(Cumin), வெந்தயம்(Fenugreek) மற்றும் வால் மிளகு ஆகிய முன்றையும் சமஅளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தால் இளநரை மறையும்.
 10. நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளநரை(White Hair) ஏற்படுவதை தடுக்கலாம்.
 11. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வேம்பாளம் பட்டையை நன்கு பொடி செய்து  தேங்காய் எண்ணெயில் கலந்து தடவலாம். இது இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
 12. நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம்.
 13. தாமரைப் பூவை கஷாயம் வைத்து காலை, மாலை என தொடர்ந்து குடித்து வந்தால் இளநரை(White Hair) ஏற்படுவதை குறைக்கலாம்.
 14. கடுக்காய்க்கு இளநரையை அகற்றிக் முடியை கருமையாக்கும் தன்மை உண்டு. கடுக்காயை நீரில் நன்கு ஊறவைத்து அந்த நீரையும் கரிசலாங்கண்ணிச் சாற்றையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறவைத்து குளிக்கலாம்.
 15. தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய், அரப்பு, பாசிப்பயறு மாவு போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: கூந்தல் வேகமாக வளர டிப்ஸ்…!

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment