விரைவில் கர்ப்பமடைவது எப்படி?

How To Get Pregnant? | விரைவில் கர்ப்பமடைவது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பெண்கள் குழந்தை பேரு பெறுவது எப்படி?(How To Get Pregnant?) என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றனர். இதனால் சரியாக நேரத்தில் கருவுறாமல் போவது அல்லது கர்ப்பம் அடையும் காலம் தள்ளிப்போவது என்பது ஏற்படுகிறது. மேலும் பல்வேறு பெண்கள் அவர்களின் அறியாமையால் தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்பது கூட தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர். இதனை தவிர்க்க பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. இந்த பதிவில் விரைவில் கர்ப்பமடைவது எப்படி?(How To Get Pregnant?) என்பது பற்றி காணலாம்.

கர்ப்பம் எவ்வாறு ஏற்படுகிறது?

 • பொதுவாகவே பெண் குழந்தை பேரு பெறுவதற்கான காலம் மாதவிடாயின் முதல் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை ஆகும்.
 • பெண்ணின் கருப்பையில் உள்ள கருமுட்டைகள் மாதம் ஒருமுறை முதிர்ச்சி அடைகிறது.
 • கருவுற்ற முட்டைகளை தயார் செய்ய கருப்பையின் புறணி தடிமனாகத் தொடங்கும்.
 • கருமுட்டை நன்றாக முதிர்ச்சி அடைந்த பின்னர் கருப்பையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இது அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகிறது.
 • அண்டவிடுப்பின் பொழுது கர்ப்பப்பையின் வாய் மெல்லியதாகவும் மற்றும் தெளிவாகவும் மாறும். இதனால் விந்தணுக்கள் கருமுட்டையை நோக்கி எளிதாக நீந்திச் செல்ல முடியும்.
 • அண்டவிடுப்பின் போது விந்தணுக்கள் இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கருமுட்டை கருவுறும் வாய்ப்பு உண்டாகிறது. இதற்கு ஒரு விந்தணு மட்டும் கருமுட்டையுடன் சேர வேண்டும்.
 • கருமுட்டை கருவுற்றிருந்தால் அது கர்ப்பப்பை நோக்கி நகர்ந்து அதிக உயிரணுக்களாக பிரியத்தொடங்கும்.
 • கர்ப்பப்பையை அடைந்ததும் கருவுற்ற முட்டையானது கர்ப்பப்பையின் புறணியை இணைக்க வேண்டும். இந்த நிகழ்வு உள்வைப்பு என்று அழைக்கப் படுகிறது. மேலும் இதுவே கர்ப்பத்தின் தொடக்கமாகும்.
 • பல கருவுற்ற முட்டைகள் கர்ப்பப்பையின் புறணியுடன் பொருத்தப்படாமல், உடலுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.
 • கருமுட்டை கருவுறாவிட்டால், அது மீண்டும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலில் ஹார்மோன் அளவு குறைகிறது. கருப்பைப் புறணி சிந்தப்படுகிறது. இது அடுத்த மாதவிடாயின் தொடக்கமாகும்.

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம்

பெண்கள் விரைவில் கர்ப்பமடைய வேண்டும் என்றால் அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்வது முக்கியம். அவ்வாறு செய்தால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். அது தொடர்பான சில தகவல்கள் பின்வருமாறு:

 • கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க முதலில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் ஆரோக்கியமான விந்தணு கருமுட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்.
 • மாதவிடாய் வெளியேறும் காலத்தை கணக்கில் கொண்டு, கருமுட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் உடலுறவு கொண்டால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
 • பொதுவாகவே மாதவிடாய் ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் வரை உள்ள காலகட்டமானது கர்ப்பமடைய ஏற்ற காலம் ஆகும்.

கர்ப்பமடையும் வாய்ப்பை பாதிக்கும் காரணங்கள்

இயல்பாகவே பெரும்பாலான பெண்களுக்குள் எழும் கேள்வி தான் இது. தான் கர்ப்பம் அடைய எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது? மற்றும் கருவுறாமல் போவதற்கான காரணங்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள பெரும்பாலான பெண்கள் நினைப்பார்கள்.

நல்ல ஆரோக்கியமாக உள்ள தம்பதிகள் கருவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். இத்தகைய தம்பதியினர் கருவுறாமல் போனால் அதற்கான வாய்ப்புகள் 15% முதல் 25% மட்டும் தான். ஒரு பெண் கர்ப்பமடையாமல் போவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

 • ஒரு பெண் 30 வயதை கடந்துவிட்டால் அவள் கருவுறும் வாய்ப்பு 30 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை விட குறைவாக இருக்கும். 40 வயதை கடந்த பெண்களுக்கு இந்த சதவிகிதம் மிகவும் குறையும்.
 • சீரற்ற மாதவிடாய் ஒரு பெண் கர்பமடையும் வாய்ப்பை பெரிதும் பாதிக்கிறது. சீரற்ற மாதவிடாய் காரணமாக சரியான காலத்தில் உடலுறவு கொள்ளும் நாட்களை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படும்.
 • எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்கிறீர்கள் என்பதும் கருவுறும் வாய்ப்பை தீர்மானிக்கும். குறைத்த அளவு அல்லது சில நாட்கள் மட்டுமே உடலுறவு கொள்பவர்களுக்கு கர்பமடையும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
 • எவ்வுளவு காலம் கர்பமடையும் முயற்சியில் உள்ளீர்கள் என்பதும் கருவுறும் வாய்ப்பை தீர்மானிக்கும். ஒரு வருடம் முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்.
 • ஏதாவது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது உடலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ கருவுறும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.

கருவுற்றிருப்பதை காட்டும் அறிகுறிகள்

ஒரு பெண் தான் கருவுற்றிருக்கிறோமா? இல்லையா என்பதை ஒரு சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறிகள் மாறுபடும். எனினும் கர்ப்பம் தரித்ததை அறிந்துகொள்ள பொதுவான ஒரு சில அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளை தெரிந்து கொண்டால் விழிப்புணர்வோடு இருக்கலாம். அவை பின்வருமாறு:

 • முதல் அறிகுறி மாதவிடாய் ஏற்படாது.
 • மார்பகங்கள் மிருதுவாகவும், சிறிது வீக்கம் உள்ளது போன்றும் தோன்றும்.
 • வாந்தி மற்றும் கொமட்டல் போன்றவை ஏற்படும்.
 • உடல் அதிக சோர்வாக இருக்கும்.
 • ஒரு சில பெண்களுக்கு உடல் வீக்கம் ஏற்படும்.
 • மலசிக்கல் ஏற்படும்.
 • அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த அறிகுறிகளானது உடலில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் ஏற்படும். எனவே கர்ப்பத்தை உறுதி செய்ய கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளவது மிகவும் நல்லது. தற்போது வீட்டிலேயே கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும் முறைகள் வந்துவிட்டன. அவற்றை கொண்டும் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment