வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல்(White Vaginal Discharge) என்ற ஒரு பிரச்சனை இருக்கிறது. வெள்ளைப்படுதல் மாதவிலக்கு வரும் முன்னரும் மாதவிலக்கு வந்த பிறகும் வரும். இது இயல்பான ஒன்று தான். ஒரு சில பெண்களுக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அவர்கள் தங்கள் உடலை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். மருத்துவம் பார்க்காமல் விட்டுவிடக் கூடாது. இந்த பதிவில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்திய குறிப்புகள்(Home Remedies for White Vaginal Discharge) காணலாம்.

வெள்ளைப்படுதல் அதிகமாக ஏற்பட்டாலோ, பிறப்புறுப்பில் அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன் தரும். மஞ்சள் நிறம், பச்சை நிறம் மற்றும் அரிப்பு எடுத்து வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம் | Home Remedies for White Vaginal Discharge:

1. சிட்ரஸ் – வைட்டமின் சி கூட்டணி

வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக குடித்து வரலாம். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அழித்துவிடும். மேலும் பிறப்புறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தையும் போக்கும்.

2. மஞ்சள் பால் – கோல்டன் மில்க்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள எல்லாக் கிருமிகளும் நீங்கிவிடும். மேலும் வெள்ளைப்படுதல் பிரச்னையே இருக்காது.

3. உடல்சூடு – இளநீர்

ஒரு சில பேருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காரணமாக வெள்ளைப்படுதல் ஏற்படும். மேலும் சிலருக்கு டென்ஷன், ஒற்றைத் தலைவலி, பதற்றம், அதிக கோபம் இப்படியான அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கும் வெள்ளைப்படுதல் பிரச்னை அடிக்கடி வரும்.

  • வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் ஒரே நாளில் 2-3 இளநீர் குடிக்கலாம்.  வாரம் 3-4 முறையாவது, அல்லது ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிக்கலாம்.
  • உணவில் அதிகமான காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதல் விரைவில் நிற்கும்.

4. தண்ணீர்

ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் மிகவும் அவசியம். வெப்ப மண்டலமாக இருந்தால் 2 லிட்டர் மேலேகூட குடிக்கலாம். உடலில் நீர்ச்சத்துஅதிகமாக இருந்தாலே உடலில் எல்லாக் கிருமியும் ஃப்ளஷ் அவுட்டாகி வெளியே வந்துவிடும். அந்த அளவுக்கு தண்ணீருக்கு உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் சக்தி உண்டு.

5. ஆலிவ் எண்ணெய்

  • ஒரு நாளைக்கு 2-3 ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆலிவ் எண்ணையில் ஆன்டி-லுக்கோரியா தன்மை உள்ளதால் வெள்ளைப்படுதல் பிரச்னையை தீர்க்க உதவுகிறது.

6. நெல்லிக்காய் ஜூஸ்

  • தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் 48 நாட்களில் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முழுமையான குணம் கிடைக்கும்.
  • நெல்லிக்காயில் ஆன்டி-இன்ஃப்ளேமட்டரி, ஆன்டி-ஆக்சிடேட்டிவ் தன்மை இருப்பதால் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணப்படுத்த உதவுகிறது.

7. கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் கர்ப்பப்பையை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, பிசிஓடி, சிஸ்ட், கர்ப்பப்பை புற்றுநோய் என கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஜூஸ் தீர்வு தருகிறது.  கற்றாழை ஜூஸ் எடுத்து அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்து 48நாட்கள் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து முழுமையான தீர்வு பெறலாம்.

8. அன்னாசிப்பூ

  • அன்னாசிப்பூ வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு சிறந்த ஒரு மருந்து. தொற்றால், கிருமிகளால் வந்த வெள்ளைப்படுதலை முழுமையாக நீக்க அன்னாசிப்பூ உதவுகிறது.
  • அன்னாசி பூ ஒன்றை எடுத்து நன்றாக இடித்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு பின்னர் வடிகட்டி அருந்த வேண்டும்.  வெள்ளைப்படுதல் விரைவில் குணமாகும்.

9. யோகர்ட், தயிர், மோர்

வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் யோகர்ட், தயிர், மோர் ஆகிய மூன்றையும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வெள்ளைப்படுதலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். மேலும் யோகர்ட், தயிர், மோர் இந்த மூன்றிலும் ப்ரோபயோட்டிக் உள்ளதால் வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாகும்.

இதையும் படிங்க: அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

மாதவிடாய் காலம்

  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு 4-5 சானிடரி நாப்கின்களை மாற்றுவது மிகவும் நல்லது.
  • மாதவிடாய் காலத்துக்கு எனத் தனி உள்ளாடையை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய உள்ளாடையை வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய உள்ளாடையை அயன் செய்த பிறகே அணிய வேண்டும். இதனால் உள்ளாடையில் உள்ள கிருமிகள் அழியும்.

இதையும் படிங்க: மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்வது எப்படி?

  • யோகர்ட் அல்லது தயிரை பிறப்புறுப்பில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • திரிபலா என்பது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகியவை கலந்த கலவை. இதை 1 லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கலந்து இளஞ்சூடாக்கி பிறப்புறுப்பில் ஊற்றி கழுவலாம்.
  • 8 டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு இளஞ்சூடாக்கி பிறப்புறுப்பில் கழுவலாம். இது பிறப்புறுப்பில் உள்ள கிருமிகளை நீக்கிவிடும்.
  • ஒரு கப் தண்ணீரில் ஃப்ரெஷ் கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக கலக்கி, அதைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவலாம்.

அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க வழிமுறைகள்:

  • மிகவும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
  • லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ் மற்றும் டைட்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.
  • சிந்தட்டிக் உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டும்.
  • தளர்வான, காற்றோட்டமான பருத்தி உள்ளாடையை அணிய வேண்டும்.
  • முடிந்தவரை இண்டியன் கழிப்பறையை பயன்படுத்துங்கள். வெஸ்டர்ன் கழிப்பறை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
  • வெந்நீரை பிறப்புறுப்பில் ஊற்றி கழுவ கூடாது. இதனால் பிறப்புறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாகூட நீங்கிவிடும். இளஞ்சூடாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்ண கூடாது.
  • பிறப்புறுப்பில் வாசம் மிகுந்த சோப் மற்றும் பவுடர் போட கூடாது.
  • 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…