Home Remedies for Weight Loss
Home Remedies for Weight Loss | உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம்

Home Remedies for Weight Loss | உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம் 

உடல் எடை பிரச்சனை மட்டுமே இன்று பல்வேறு மக்களின் தலைவலியாக உள்ளது. அதிகப்படியான உடல் எடையால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க பலவகையான மருந்துகளை கடைகளிலோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து முயற்சி செய்கின்றனர். இந்த மருந்துகளால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை வீட்டு வைத்தியத்தின்(Home Remedies for Weight Loss) மூலமாக எளிதில் குறைக்கலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

இஞ்சியின் தோலை சீவி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து இளம்சூடான நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நமது உடலின் செரிமானத்தை நன்றாக தூண்டுவதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.

இதையும் படிங்க: தொப்பையை குறைக்க டிப்ஸ்

வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக பொடி செய்து, தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் வெந்நீரில் அரை டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் நீங்கும்.

பெருஞ்சீரகத்தை நன்றாக பொடி செய்து, ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அளவு பொடியை கலந்து காலை மற்றும் மாலை என இருவேளை குடித்து வந்தால் உடல் எடை நன்றாக குறையும்.

சீரகம், மிளகு, திப்பிலி, மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான் மற்றும் நெருஞ்சில் போன்ற பொருட்களை சமஅளவு எடுத்து நன்றாக பொடிசெய்து சிறிதளவு தேன் கலந்து காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

சிறிதளவு எலுமிச்சைசாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள ‘வைட்டமின் சி’ நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை தினசரி முறையாக மேற்கொண்டு வந்தால் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.

தினசரி குறைந்தது இரண்டு லிட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் உண்ணும் உணவில் தக்காளி, முட்டைகோஸ், வெள்ளரி, தர்பூசணி, மோர், ஆப்பிள், ஓட்ஸ், வால்நட் மற்றும் பாதாம் பருப்புகள் ஆகியவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துரித உணவுகள், எண்ணெய் பொருட்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், அதிகம் இனிப்பு கலந்த உணவு பொருட்கள் மற்றும் பட்டை தீட்டிய தானியங்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…