Home Remedies for Ulcers
Home Remedies for Ulcers | அல்சர் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்

Home Remedies for Ulcers | அல்சர் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் வயிற்று புண் அதாவது அல்சர்(Ulcer). சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும். சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி(Stomach Pain) ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் அல்சர் பிரச்சினைக்கு(Home remedies for Ulcers) தீர்வு காணலாம்.

இதையும் படிங்க: மூல நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

  • தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண்(Ulcer) சரியாகும்.
  • முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும்.
  • காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
  • தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • அல்சர் பிரச்சனைக்கு மற்றொரு சிறந்த தீர்வு ஒன்று உண்டு என்று இருந்தால் அது நெல்லிக்காய் தான். நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தால் அல்சர் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல்(Stomach irritation) பிரச்சனை சரியாகும்.
  • பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்று புண் சரியாகும்.
  • வெந்தய டீ, கற்றாழை ஜூஸ்(Aloe Vera Juice) இதற்கு ஒரு நல்ல தீர்வாகும்.
  • குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…