தொங்கும் மார்பகங்களை டைட்டாக்க வேண்டுமா? இத படிங்க…

Home Remedies for Sagging Breasts | தளர்ந்து தொங்கும் மார்பகங்களை டைட்டாக்க இயற்கை வழிகள்

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் அதிகமாக சந்திக்கும் ஒரே பிரச்சனை அவர்களின் மார்பகங்கள் தளர்ந்து தொங்கி அசிங்கமாக காணப்படுவது தான். பெண்களின் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதால் அவர்களால் விருப்பமான எந்த ஒரு உடையையும் அணிய முடியாது. இந்த பதிவில் பெண்களின் மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன? மார்பகங்கள் தளர்ந்து தொங்க காரணங்கள் மற்றும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் (Home Remedies for Sagging Breasts)  பற்றி காணலாம்.

இதையும் படிங்க: பிரசவத்துக்கு பின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்க வீட்டு வைத்தியம்

மார்பகங்கள் தளர்ந்து தொங்க காரணங்கள்

பெரும்பாலும் பெண்களின் மார்பகங்கள் தளர்ந்து தொங்க கீழ்கண்ட காரணிகளே முக்கியமான காரணமாக அமைகின்றன. அவை பின்வருமாறு:

 • வயது அதிகரித்தல்
 • உடல் பருமன் அதிகரித்தல்
 • கருத்தரித்தல்
 • புகைபிடித்தல்

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற…

பெண்கள் தங்களின் தளர்ந்து தொங்கும் மார்பகங்களை ஒரு சில இயற்கை வழிகள் (Home Remedies for Sagging Breasts)  மூலம் சிக்கென்று மாற்றலாம். அவை பின்வருமாறு:

 1. பெண்கள் நீண்ட நேரம் கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது அவர்களின் மார்பகங்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே எப்பொழுதும் உட்காரும் பொழுது கூன் போட்டு உட்காராமல் நேரான நிலையில் உட்கார வேண்டும். இதனால் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் சிக்கென்று நேராக இருக்கும்.
 2. தளர்ந்து தொங்கும் மார்பகங்களை சிக்கென்று நேராக மாற்ற, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும்.
 3. மார்பகங்களின் மீது கற்றாழை ஜெல்லைக் (Aloe Vera Jel) கொண்டு மசாஜ் செய்யலாம். இவ்வாறு மசாஜ் செய்வதால் மார்பகங்களின் மேல் உள்ள பகுதியில் இரத்த ஓட்டம்அதிகரிக்கும் மற்றும் இணைப்புத்திசுக்கள் வலிமையாகும். மார்பகங்கள் தொங்காமல் நேராக இருக்கும். இதற்கு தினமும் 15 நிமிடங்கள் கற்றாழை ஜெல் கொண்டு மார்பகங்களில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
 4. வெள்ளரிக்காயை நன்கு துருவி, அதனுடன் சிறிதளவு வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவை சேர்த்து நன்கு கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் சிக்கென்று நேராக இருக்கும்.
 5. ஆலிவ் ஆயிலில் (Olive Oil) அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது.இவை மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது. எனவே தினமும் 15 நிமிடம் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல ஒரு மாற்றம் காணலாம்.
 6. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து நன்கு அடித்து, அதனை மார்பகங்களின் மீது  தடவி, 30 நிமிடம் வரை ஊற வைத்து நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீனானது, மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும். மேலும் மார்பகங்கள் தொங்காமல் சிக்கென்று நேராக இருக்கும்.
 7. தளர்ந்து தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் மற்றொரு சிறப்பான வழி தான் உடற்பயிற்சி. பெண்கள் தினமும் புஷ்-அப் மற்றும் செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும். மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் சிக்கென்று நேராக இருக்கும்.

இதையும் படிங்க: டைட்டான பிரா போடுபவரா நீங்கள்? அப்ப இத படிங்க…

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment