முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

Home Remedies for Pimples | முகப்பரு தடுக்க வீட்டு வைத்தியம்

இன்றைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்களின் முக அழகை கெடுக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது முகப்பரு(Pimples) பிரச்சனை. தங்களின் முகம் பருக்கள் இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் விரும்புவர். முகப்பரு ஏற்பட முக்கிய காரணம் உடல் சூடு, சருமத்தில் ஏற்படும் மாசு மற்றும் முகத்தில் எண்ணெய் வடிவது போன்றவை ஆகும். முகப்பருவுக்கு வீட்டு வைத்தியம்(Home Remedies for Pimples) மூலமாக தீர்வு காணலாம்.

முகப்பரு வந்த பின்னர் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி(Dark Spots) மற்றும் தழும்புகள் (Wounds) அவ்வளவு எளிதாக மறைவது இல்லை. எனவே கூடியமட்டும் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க வேண்டும். இந்த பதிவில் முகப்பரு(Pimples) வராமல் தடுக்கவும், வந்த முகப்பருவை நீக்கவும் குறிப்புகளை காணலாம்.

Home Remedies for Pimples

 1. முகப்பரு பிரச்சனைக்கு பூண்டு(Garlic) ஒரு நல்ல தீர்வு. பூண்டில் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் உண்டும். முகப்பரு வருவது போல தெரிந்தால் அந்த இடத்தில் பூண்டு சாற்றை தடவி 15 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரம்ப கட்டத்திலே முகப்பருவை தடுக்கலாம்.
 2. வாழைப்பழ தோலை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர்(Curd) சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் ஊறவைத்து முகம் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை(Dark Spots) தடுக்கலாம்.
 3. சோடா உப்புடன் எலுமிச்சை சாறு(Lemon juice) மற்றும் தேன்(Honey) கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
 4. கடுகில் சாலிசிலிக் அமிலம்(Salicylic Acid) என்ற ஒருவகை அமிலம் உள்ளது இது முகப்பருவை அறவே நீக்கும் தன்மை உடையது. சிறிதளவு கடுகை(Mustard) நன்றாக பொடி செய்து அதனுடன் தேன்(Honey) கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகப்பருவை அறவே நீக்கலாம்.
 5. ஐஸ் கட்டிகளை கொண்டும் முகப்பருவை நீக்கலாம். ஐஸ் கட்டியை எடுத்து முகப்பரு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து வந்தால் முகப்பருக்கள் விரைவில் மறைந்து விடும்.
 6. எலுமிச்சை சாறுடன்(Lemon juice) சிறிதளவு நீர் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பையும் நீக்கலாம்.
 7. பசு சாணம் கொண்டு செய்யப்பட்ட விபூதியை நீரில் குழைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
 8. நாமக்கட்டியை உரசி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.
 9. தினமும் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 10. உணவில் கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள், எண்ணெய் பொருட்கள் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.
 11. குளிக்கும் போது சோப்புக்கு பதில் கடலை மாவு அல்லது பச்சைப்பயிறு மாவு தேய்த்து குளிக்க வேண்டும்.
 12. தினமும் குளிக்கும் நீரில் வேப்பிலைகளை போட்டு நன்றாக ஊறவைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் குறையும்.
 13. முகத்தில் எண்ணெய் வடிவது அதிகம் இருந்தால் அவர்களுக்கு முகப்பரு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
 14. மலச்சிக்கல்(Constipation) பிரச்சனை இருந்தாலும் முகப்பருக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே கூடியமட்டும் மலச்சிக்கல்(Constipation) இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 15. பாசிப்பயறு மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு(Lemon juice) கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும். மேலும் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 16. கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பயத்தம் மாவு, சீயக்காய், நன்னாரி வேர், எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை நன்றாக அரைத்து சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
 17. லவங்க பட்டையை(Cinnamon) நன்றாக தூள் செய்து அதனுடன் தேன்(Honey) கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.
 18. முட்டையின் வெள்ளை கருவை மட்டும் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment