மூல நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

Home remedies for Piles | மூல நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

பெரும்பாலான மக்கள் கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒரு பிரச்சனை மூல நோய்(Hemorrhoids). அதாவது பைல்ஸ்(Piles). பெரும்பாலும் மூல நோயால் 45-65 வயதிற்குட்பட்டோர் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது இளம் வயதினரும் கூட இந்த பைல்ஸ் பிரச்சனை காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மூலநோயை வீட்டு வைத்தியம்(Home remedies for Piles) மூலமாக குணப்படுத்தலாம்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

மூல நோய் ஏற்பட காரணம்

ஆசனவாய்(Anus) மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கம் அடைந்து புண்ணாவதால் மூல நோய் ஏற்படுகிறது. மூல நோய்(Hemorrhoids) ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பரம்பரை வழியாக, மலச்சிக்கல்(Constipation), அளவுக்கு அதிகமாக எடை தூக்குதல், நார்ச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் சூடு, கர்ப்பம், நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருத்தல் போன்ற பல காரணங்களால் மூல நோய்(Hemorrhoids) ஏற்படுகிறது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம்

மூல நோயின் வகைகள்

மூல நோய்(Hemorrhoids) ஏற்பட்டுள்ள இடம், தீவிரம் மற்றும் மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடுகிறது.  பெரும்பாலும் உள் மூலம்(Internal hemorrhoids) மற்றும் வெளி மூலம்(External hemorrhoids) என இருவகையான மூல நோயால் மட்டும் தான் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

இதையும் படிங்க: குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

அறிகுறிகள்

மூல நோயால் பாதிக்கப்பட்டால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதையும் படிங்க: முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

மூல நோய்க்கு வீட்டு வைத்தியம்

மூல நோய் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அது முற்றி மலம் கழிக்கும் போது அதிகமான இரத்தக்கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசனவாய் மற்றும் குடல் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை உடனடியாக கவனிக்க வேண்டும். மூல நோய் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியத்தின் மூலமாக தீர்வு காணலாம்.

ஐஸ்

மூல நோய்க்கு சிறந்த சிகிச்சை எது என்றால் அது ஐஸ் தான். ஐஸ்கட்டி(Ice Cube) கொண்டு ஆசனவாயில் ஒத்தடம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஐஸ்கட்டிகளை ஒரு துணியில் போட்டு, அதனை கொண்டு ஆசன வாயில் வலி உள்ள இடத்தில் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஒத்தடம் கொடுக்கலாம்.

கற்றாழை

கற்றாழையின்(Aloe Vera) நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து அதனை ஆசனவாயில் தடவி மசாஜ் செய்து வந்தால், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சைச்சாறு

எலுமிச்சைச்சாறு(Lemon Juice) கொண்டு கூட மூல நோயில் இருந்து நிவாரணம் பெறலாம். எலுமிச்சையை நன்றாக பிழிந்து சாறு எடுத்து அதனை பஞ்சில்(Cotton) நனைத்து, அதனை ஆசனவாயில் மெதுவாக தடவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதலில் எரிச்சலாகத்தான் இருக்கும். ஆனால் உடனடி நிவாரணம் பெறலாம். இல்லையெனில் சூடான பாலில் எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை கொண்டு ஆசனவாயில் மெதுவாக தடவலாம். முன்று மணிநேரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.

பாதாம் எண்ணெய்

நமது உடலில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் ஆற்றல் பாதாம் எண்ணெய்க்கு(Almond Oil) உள்ளது. சிறிதளவு பஞ்சை(Cotton) எடுத்து, அதனை பாதாம் எண்ணையில் நன்றாக நனைத்து அதை கொண்டு ஆசனவாயில் வலி உள்ள இடத்தில் தடவிவந்தால் எரிச்சல், வலி மற்றும் அரிப்பு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்

ஆசனவாயில் உள்ள வீக்கத்தை குறைக்க, தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் (Olive Oil) குடிக்கலாம். ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்(Mono unsaturated Fats), பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்து அதனுடைய இயக்கத்தை அதிகரிக்கும். மற்றொரு வழியாக ஆலிவ் எண்ணையை பஞ்சு(Cotton) கொண்டு ஆசனவாயில் வலி உள்ள இடத்தில் தடவலாம். இதுவும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவற்றை குறைக்கும்.

தானியங்கள்

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிகளவு தானியங்களை சேர்க்க வேண்டும். தானியங்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே உணவில் அதிகளவு தானியங்களை சேர்த்து வந்தால் மூல நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்ற தானியங்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதனால் கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரானது(Apple Cider Vinegar) இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் தருகிறது. ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில்(Cotton) நனைத்து, ஆசனவாயில் வலி உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இல்லையெனில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்து அதை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அதனுடன் தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

டீ பேக்

டீயில் உள்ள டானிக் ஆசிட்டானது மூல நோய்க்கு காரணமான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே டீ பேக்கை(Tea Bag) சுடுநீரில் நன்றாக ஊற வைத்து, பின்னர் அதனை கொஞ்சம் குளிர வைத்து, ஆசனவாயில் வலி உள்ள இடத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தினமும் 2 அல்லது 3 முறை இவ்வாறு ஒத்தடம் கொடுக்கலாம். இல்லையென்றால், டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, பின்னர் அதனை ஆசனவாயில் வலி உள்ள இடத்தில் 10 நிமிடம் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

தண்ணீர்

மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள் அதிகளவு தண்ணீர்(Drinking Water) குடிக்க வேண்டும். நமது உடலில் தண்ணீர் போதிய அளவு இருந்தால் தான் குடலியக்கம் சீராக இருக்கும். குடலியக்கம் சீராக இருந்தால் தான் மலம் எளிதாக வெளியேறும். தண்ணீர் சரியாக குடிக்காமல் விட்டால், ஆசனவாயில் கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலி ஏற்படும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment