அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

Home remedies for Period Pain | மாதவிலக்கு வலி குறைய மருத்துவம்

வயிற்றுவலியால் பாதிக்கப்படாத பெண்களே இல்லை. அதிலும் 28 நாட்களுக்கு ஒருமுறை வரும் அந்த மூன்று நாட்களில்(மாதவிடாய் காலம் – Period of Menstruation) ஏற்படும் வயிற்று வலியால் அவர்கள் பெரும் அவஸ்தைகளை வெறும் வார்த்தைகளில் சொல்லி புரியவைக்க முடியாது. அவ்வளவு கொடுமையானவை “அந்த மூன்று நாட்கள்“. இந்த மாதவிலக்கு வலிக்கு இயற்கை வைத்தியம்(Home remedies for Period Pain) மூலம் நமது முன்னோர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

30 வருடங்களுக்கு முன்பு கூட மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அனைத்து பெண்களும் வயது வித்தியாசம் இன்றி அனைத்து வேலைகளில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டனர். கடுமையாக வேலை வாங்கும் வீடுகளில் கூட அந்த மூன்று நாட்கள் கட்டாய ஓய்வு அளித்திருக்கின்றனர்.

மாதவிலக்கு

ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் அவளின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகும். இந்த கருமுட்டைகள் கருவடையாத நிலையில் மாதம் ஒருமுறை இரத்தப்போக்கு மூலம் வெளியேறும். இதற்கு பெயர் தான் மாதவிடாய்(Menopause). சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் இரத்தப்போக்கு (Menstrual bleeding) அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

இந்த நேரத்தில் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும். ஒரு சில பெண்களுக்கு இந்த மாதவிலக்கு வலி(Menstrual pain) மிகவும் கடுமையாக இருக்கும். அவ்வாறு வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும் பெண்கள் படுக்கையை விட்டு கூட எழமுடியாது. மேலும் அந்த காலத்தில் உணவுகூட சாப்பிடமுடியாமல் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

அதிகளவு இரத்தப்போக்கு, உடல் சோர்வு மற்றும் அசௌரியகமான உணர்வு இருக்கும் பெண்கள் தங்களின் வயிற்றுவலியை போக்க சோடா மற்றும் வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பார்கள். ஒரு சிலர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இவை அந்த நேரத்திற்கு மட்டுமே புத்துணர்வு மற்றும் தீர்வு அளிக்கும். ஆனால் இதனால் பின்னாளில் உடலுக்கு தீங்கு ஏற்படும்.

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

மாத்திரைகள் மற்றும் வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் இன்றி நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதன் மூலமாக வயிற்றுவலி இல்லாமல் அந்த மூன்று நாட்களை கடக்கலாம். மாதவிடாய்(Menopause) ஏற்படும் நாட்களுக்கு முன்பு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டில் மாடிப்படிகளில் ஏறி இறங்கி உடலுக்கு வலிமை ஏற்படுத்தலாம். மேலும் வீட்டில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது உடலுக்கு வலு கொடுக்கும்.

  • ஒரு சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக கூட வயிற்றுவலி ஏற்படும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க(Oil Bath) வேண்டும்.
  • மாதவிலக்கு காலத்தில் உடல் சூடு குறைய எலுமிச்சை சாறு(Lemon Juice) எடுத்து அதனுடன் உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும்.
  • மாதவிடாய் ஏற்படும் காலத்திற்கு முன்பு தினமும் இரவு ஒரு டம்ளரில் ஒரு டீஸ்பூன் வெந்தயம்(Fenugreek) போட்டு ஊறவைத்து அந்த நீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மென்று அல்லது அப்படியே கூட முழுங்கலாம்.
  • வெந்தயத்தை நன்றாக பொடி செய்து அதனை நீரில் கரைத்தும் குடிக்கலாம்.

மேற்கொண்ட வழிமுறைகளை தொடர்ந்து மூன்று மாதம் கடைபிடித்து வந்தால் மாதம் தவறாமல் ஏற்படும் மாதவிடாய் வலி(Pain in Menstruation) கூட நாளடைவில் இல்லாமல் போகும். இதனால் மாதத்தின் மற்ற நாட்களை போல அந்த மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக கழிக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment