மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

Home remedies for Menstrual Pain | மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு பெண் தாய்மை பேற்றை அடைய ஒவ்வொரு மாதமும் அப்பெண்ணின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகும். இந்த கருமுட்டைகள் கருவடையாத பட்சத்தில் மாதமொரு முறை வெளியேறும். இந்த நிகழ்வு மாதவிடாய் என அழைக்கபடுகிறது. இந்த மாதவிலக்கு காலத்தில் ஒரு சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும். இந்த மாதவிடாய் நேர வலியை வீட்டு வைத்தியத்தின்(Home remedies for Menstrual Pain) மூலமாக குணப்படுத்தலாம்.

இந்த கடுமையான வலிக்கு பெண்களின் உடல் தன்மை, ஹார்மோன்களின் அதீத உற்பத்தி மற்றும் கர்ப்பப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அடிவயிற்று பகுதியில் அதிகமாக வலி இருக்கும். மேலும் இந்த வலியானது இடுப்பு மற்றும் கால்களுக்கும் பரவும்.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

கடுகு எண்ணெய் & விளக்கெண்ணெய்

மாதவிலக்கு வலியானது(Menstrual pain) பனி நேரத்தில் ஏற்படும் போது வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் பனி நேரத்தில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பையானது சுருங்கி விரிவது வழக்கமான நாட்களை விட அதிகமாக இருக்கும். இதனால் தான் மாதவிடாய் நேரத்தில் வலி(Menstrual pain) அதிகமாக ஏற்படுகிறது.

கடுகு எண்ணெய்(Mustard Oil) மற்றும் விளக்கெண்ணெய்(Castor Oil) இரண்டையும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சூடு பண்ணி அதனை அடிவயிற்றில் நன்றாக தேய்த்து வெந்நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதனால் கர்ப்பப்பை(Uterus) சுருங்கி விரிவது சாதாரணமாக இருக்கும். மேலும் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலியும்(Menstrual pain) குறைவாக இருக்கும்.

வெந்தயம்

நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் வெந்தயம். நமது உடலில் பல்வேறு உடற்குறைகளை போக்கும் ஆற்றல் கொண்டது. மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் கட்டாயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தினமும் இரவில் வெந்தயத்தை சிறிதளவு விழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி குறையும்.

புதினாகீரை

நமது உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துக்களை கொண்டது புதினா கீரை. மேலும் நமது உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. புதினா இலைகள் சிலவற்றை எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கும். மேலும் புதினாவை நன்றாக சாறாக பிழிந்து குடித்தாலும் மாதவிடாய் வலி குறையும்.

ஏலக்காய்

ஏலக்காய்கள் சிலவற்றை எடுத்து நன்றாக நன்கு பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்து வர மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி குறையும். மேலும் ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லவும் செய்யலாம். இதுவும் சிறந்த நிவாரணம் கொடுக்கும்.

இஞ்சி

நமது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் வலி தீர இஞ்சியை சிறிதளவு எடுத்து நீரில் போட்டு நன்றாக காய்ச்சி அவ்வப்போது சிறிதளவு குடித்து வந்தால் வலி குறையும். ஆனால் இதை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிகம் பருக கூடாது.

நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள்

மாதவிலக்கு காலத்தில் நீர்சத்துகள் அதிகமுள்ள தர்பூசணி, ஆப்பிள், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியினை குறைக்கும்.

பருப்புகள்

மாதவிலக்கு காலத்தில் ஆக்ரூட், பாதம், பிஸ்தா போன்றவற்றை உண்ணலாம். இவை நமது உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துக்களை கொண்டது. இவற்றை உண்பதால் மாதவிடாய் வலியை குறைவது மட்டுமின்றி, மாதவிலக்கு நேரத்தில் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற உதவும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment