குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

Home Remedies for Dry Cough | குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

எந்த ஒரு பெற்றோருக்கும் தங்களின் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அது சிறு உடல்நல குறைபாடாக இருந்தாலும் சரி, அவர்களின் முதல் வேலை அதனை சரிசெய்வது தான். குழந்தைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் அவ்வளவுதான். வறட்டு இருமல் வந்தால் குழந்தைகள் தொண்டை உலர்தல் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற தொல்லைகளால் எப்பொழுதும் அழுதுக்கொண்டே இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு அழுவதை தவிர்த்து வேற எந்த மொழியாலும் அதனை வெளிப்படுத்த தெரியாது. குழந்தைகளின் வறட்டு இருமலை வீட்டு வைத்தியம்(Home Remedies for Dry Cough) மூலம் குணப்படுத்தலாம்.

தாய்ப்பால்

குழந்தைகளின் வறட்டு இருமலுக்கு தாய்ப்பாலை தவிர வேற சிறந்த மருந்து வேற எதுவும் இல்லை. குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக்கொண்டு இருந்தால் வறட்டு இருமலுக்கு அதையே மருந்தாக கொடுக்கலாம். திரவ உணவுகளானது எப்பொழுதும் குழந்தையின் உணவுப் பாதையை ஈரத்துடன் பாதுகாக்கும். மேலும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தால் வறட்டு இருமல் குணமாகும். பெரியவர்களுக்கு ஆவி பிடிக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. குழந்தைக்கு ஆவி பிடிக்க வெந்நீரை பாத்ரூம் வாளியில் ஊற்றி அதில் மருந்து ஊற்றி பாத்ரூம் கதவை அடைத்து தாயும் குழந்தையும் அந்த பாத்ரூமில் இருக்கலாம். இந்த முறையில் ஆவி பிடித்து குழந்தையின் வறட்டு இருமலை குணப்படுத்தலாம்.

தேன்

இயற்கையிலே தேன் ஒரு அற்புதமான மருந்து. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு வறட்டு இருமல் இருந்தால் அவர்களுக்கு பட்டையை நன்றாக தூள் செய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்கலாம். இது வறட்டு இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சீரக தண்ணீர்

சீரகம் செரிமானத்திற்கு மிகச்சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால் அவர்களுக்கு சீரகத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து அந்த நீரை குடிக்க கொடுத்தால் குணமாகும்.

மஞ்சள் கலந்த பால்

மஞ்சள் தூள் இயற்கையிலே ஒரு ஆன்டிபயாடிக். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையானது வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு பாலில் மஞ்சள்தூளை கலந்து கொடுத்து வந்தால் வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சல் சரியாகும். மேலும் வறட்டு இருமலும் விரைவில் குணமாகும்.

யூகலிப்டஸ் தைலம்

குழந்தையை குளிப்பாட்டும் போது அந்த நீரில் இரண்டு அல்லது முன்று சொட்டு அளவு யூகலிப்டஸ் தைலத்தை கலந்து அந்த நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம். இது குழந்தைக்கு ஏற்படும் வறட்டு இருமலை குணப்படுத்தும்.

ஒரு சில குழந்தைகளுக்கு வைரஸ் மூலம் ஏற்படும் வறட்டு இருமலை குணப்படுத்த சிறிது காலம் எடுத்துக்கொள்ளுமே தவிர வீட்டு வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை எளிதாக குணப்படுத்தலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment