மலச்சிக்கல் தீர பாட்டி வைத்தியம்

Home remedies for Constipation | மலச்சிக்கல் தீர பாட்டி வைத்தியம்

பொதுவாகவே மக்களுக்கு ஏற்படும் பாதி நோய்களுக்கு மூலக்காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் என்பது மலம் கழிக்கும் போது அதிக கஷ்டத்துடனோ அல்லது வலியுடன் மலம் வெளியேறுதல், மலம் இறுகி வெளியேறுதல், மலம் கழிக்கும் முறை குறைதல் மற்றும் கழிக்கும் மலத்தின் அளவு குறைதல் ஆகும். மலச்சிக்கல் தீர வீட்டில் உள்ள பொருட்களை(Home remedies for Constipation) கொண்டே தீர்வு காணலாம்.

இதையும் படிங்க: மூல நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

மலச்சிக்கல் ஏற்பட மூலக்காரணம் தினமும் குடிக்கும் நீரின் அளவு குறைவது தான். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்தப் பதிவில் மலச்சிக்கல் பிரச்சனை தீர பாட்டி வைத்திய குறிப்புகளை காணலாம்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

Home remedies for Constipation

 • செம்பருத்தி இலைகளை(Hibiscus leaf) நன்றாக தூள் செய்து, தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • தினமும் இரவில் படுக்க செல்லும் முன்பு 2அல்லது 3 பேரிச்சம்பழம்(Dates) சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர மலச்சிக்கல் சரியாகும்.
 • காலை எடுத்தவுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • உலர்திராட்சை(Dry grapes) 5 அல்லது 6 எடுத்து வெந்நீரில் ஊறவைத்து பின்னர் அதை பிசைந்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • திராட்சையை(Grapes) கொட்டை நீக்கி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மலக்கட்டு சரியாகும். மேலும் இரத்தம் சுத்தமாகும்.
 • தினமும் இரவில் கொய்யாப்பழத்தை(Guava) சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • ஆப்பிள்(Apple), பேரிக்காய்(Pear) மற்றும் பிளம்ஸ் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • பீட்ரூட்டை(Beetroot) அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும். மேலும் இரத்தசோகை(Anemia) குணமாகும்.
 • நெல்லிக்காயை நன்றாக அரைத்து சாறு எடுத்து தினமும் அரை டம்ளர் குடித்து வந்தால் குடல் இயக்கம் நன்றாக இருக்கும். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.
 • இஞ்சியை அரைத்து துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • ஆமணக்கு விதையை(Castor seed) நீரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு குணமாகும்.
 • ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • கறிவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து இரவு உணவுடன் ஒரு தேக்கரண்டி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
 • தினமும் விளக்கெண்ணையை ஆசன வாயில் தடவி வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment