வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?

Home Pregnancy Test in Tamil | வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?

திருமணமான பல பெண்கள் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா இல்லையா என்று சரியாகத் தெரியாமல் பெரும்பாலும் குழப்பத்திலேயே இருப்பார்கள். குறிப்பிட்ட நாட்கள் வரும் வரை, அவர்களுக்கு தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா இல்லையா என்ற குழப்பம் இருக்கும். கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனைகள்(Home Pregnancy Test) செய்து உறுதிப்படுத்தலாம்.

கர்ப்ப பரிசோதனை என்பது ஒரு பெண் கருவுற்றுருக்கிறாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவுகிறது. கர்ப்ப பரிசோதனை செய்ய பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல பரிசோதைகள் உள்ளன. பெரும்பாலான பரிசோதனைகள் எளிதானதாகவே இருக்கும்.

இதையும் படிங்க: மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

வீட்டில் இருந்தபடியே கர்ப்ப பரிசோதனை செய்வதால் தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயங்களைத் தவிர்க்கலாம். மேலும், இந்த பரிசோதனையில் உங்களது கர்ப்பம் உறுதியானால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம். எனவே நீங்கள் எப்போதும் முதலில் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

வீட்டில் கர்ப்ப பரிசோதனை(Home Pregnancy Test) செய்து கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியானால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவு உங்களுக்கான பதிவு.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்

கர்ப்பத்திற்கான முதன்மையான அறிகுறிகள் என்ன?

நீங்கள் கருவுற்றிருப்பதை உறுதி செய்ய முதலில் உங்களுக்குள் ஒருசில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தாலே, ஓரளவுக்கு கர்ப்பத்தை உறுதி செய்து விடலாம். பின்னர், வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை மூலம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யலாம். இந்த வகையில், நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்களுக்கு பின்வரும் ஒருசில அறிகுறிகள் ஏற்படும்.

 • மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது
 • வாந்தி மற்றும் குமட்டல்
 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
 • இலகுவான மார்பகம்
 • மயக்கம்
 • வீக்கம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஒரு சில உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் கூட நீங்கள் ஓரளவிற்கேனும் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: மாதவிலக்கு வலி குறைய வீட்டு வைத்தியம்

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை நம்பகத்தன்மை உடையதா?

பொதுவாகவே இந்த கேள்வியானது அனைவருக்கும் ஏற்படும். பல்வேறு பெண்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது. நமது முன்னோர்கள், நமது பாட்டி மற்றும் தாய் போன்றோர் தாங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் வீட்டில் செய்யும் ஒரு சில கர்ப்ப பரிசோதனைகளைச் செய்து மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டனர்.

தற்போது பழமையான கர்ப்ப பரிசோதனை பல முறைகள் நடைமுறையில் இல்லை என்றாலும், சில எளிதாக வீட்டில் செய்யக் கூடிய நவீன மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்படும் செலவு மிகவும் குறைவு. எனவே தற்போது பெரும்பாலான பெண்கள் இந்தப் பரிசோதனைகளை வீட்டிலேயே செய்து கர்ப்பத்தை உறுதிசெய்த பின்னர் மருத்துவரை அணுகுகின்றனர்.

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனைகள் உறுதியான பின்னர் கர்ப்பத்தை 100% உறுதிசெய்ய மருத்துவரை அணுகுகின்றனர். அங்கு இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துகொள்கின்றனர். இது ஒரு நல்ல உறுதியான மற்றும் தெளிவான முடிவைத் தருவதோடு, அவர்களின் குழந்தை எதிர்பார்ப்பும் பூர்த்தியாகி விடுகின்றது.

இதையும் படிங்க: அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டியவை

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு ஒரு சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு;

 1. வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனையில் அதிகளவு உறுதிசெய்து வெற்றி பெற வேண்டும் என்றால் காலையில் எழுந்தவுடன் வரும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இது 100% துல்லியமான முடிவை தரும்.
 2. ஒருவேளை கர்ப்ப பரிசோதனை செய்ய பயன்படுத்தும் கருவியில் பழுது இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ சரியான முடிவை தராது. எனவே ஒருவேளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை முயற்சிசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் இதில் மாற்றம் கூட ஏற்படலாம். எனவே அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.
 3. மருத்துவரின் ஆலோசனையை பெற்று வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது சரியான முடிவே கிடைக்க வாய்ப்புள்ளது.
 4. முதலில் செய்யும் கர்ப்ப பரிசோதனை நெகட்டிவாக வந்துவிட்டால் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை முயற்சிசெய்ய வேண்டும். அதில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 5. டெஸ்ட் ஸ்ட்ரிப்(Pregnancy Test Strip) அதாவது சோதனை பட்டை என்பது பிரபலமான வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய உதவும் கருவி ஆகும். இதை அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும்.

இதையும் படிங்க: மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனைகள்

நவீன கர்ப்ப பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளும் வழிமுறைகள் மட்டுமல்லாமல் வேறு சில எளிய வீட்டில் உள்ள பொருட்கள் பயன்படுத்தி செய்யும் கர்ப்ப பரிசோதனை முறைகளும் உள்ளன. அவை பின்வருமாறு;

1. ஷாம்பூ
காலையில் எழுந்தவுடன் முதலில் வரும் சிறுநீரை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது ஷாம்பு எடுத்து அதனை தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் சிறிதளவு சிறுநீர் சேர்க்க வேண்டும். சில நிமிடங்கள் கவனிக்க வேண்டும். இதில் நுரை ஏற்பட்டால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். ஏனெனில் உடலில் இருக்கும் HCG ஹோர்மோனானது ஷாம்புவுடன் கலக்கும் போது செயல்பட்டு நுரை ஏற்படும்.

2. சர்க்கரை
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு சிறுநீர் சேர்க்க வேண்டும். சர்க்கரை விரைவில் கரைந்துவிட்டால் கர்ப்ப பரிசோதனை நெகடிவ் என்று அர்த்தம். சர்க்கரை இறுகி வேறு மாதிரி ஆனால் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டது என்று அர்த்தம். ஏனெனில் HCG ஹோர்மோனானது சர்க்கரையை கரையவிடாது.

3. பற்பசை
அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு சிறுநீரை சேர்க்க வேண்டும். பற்பசையானது நீல நிறமாக மாறினால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். பற்பசையானது வெள்ளை நிறத்தில் இருப்பதால் எளிதில் நிறம் மாற்றத்தை அறிந்துகொள்ளலாம்.

4. சோப்பு
ஒரு சிறிய சோப்பு துண்டு எடுத்து அதனுடன் சிறிதளவு சிறுநீர் சேர்த்து கலக்க வேண்டும். நுரை அதிகமாக ஏற்பட்டால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். ஏனெனில் HCG ஹோர்மோனானது சோப்புடன் சேரும் பொது அதிகளவு நுரையை ஏற்படுத்தும்.

5. வினிகர்
ஒரு கப்பில்அரை கப் அளவுக்கு வினிகர் எடுத்து அதனுடன் சிறிதளவு சிறுநீரைச் சேர்த்து 5 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும். வினிகர் நிறம் மாறினால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோனானது வினிகருடன் சேரும் போது சில நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.

6. பேகிங் சோடா
சிறிதளவு சிறுநீரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி பேகிங் சோடா சேர்க்க வேண்டும்.  இதில் நன்றாக நுரை ஏற்பட்டால் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோனானது பேகிங் சோடாவுடன் சேரும்போது அதிகளவு நுரையை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: மார்பகங்களை பெரிதாக்க வீட்டு வைத்தியம்

வீட்டில் செய்யும் இந்த கர்ப்ப பரிசோதனைகள் நிச்சயம் பலன்தரக்கூடியதாக இருக்கும். இதனை வீட்டில் சரியான முறையில் முயற்சி செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்து வீட்டிற்கு வரவிருக்கும் புது வரவை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment