கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி

கோடை காலங்களில் நமது உடலில் நீர்ச்சத்து இருப்பது மிகவும் அவசியம். இந்த நீர்ச்சத்து கிடைப்பதில் முதலிடம் வகிப்பது தர்ப்பூசணி பழம் தான். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதால் தாகம் அடங்கும். இது ஒன்று தான் பல்வேறு மக்களின் நினைப்பு. ஆனால் தர்ப்பூசணி பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள்(Health Benefits of Watermelon) அடங்கியுள்ளன. இது நோய்கள் பலவற்றை தீர்க்கும் திறன் கொண்டது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

தர்ப்பூசணி பழத்தில் 95 சதவீதம் நீர்சத்து மற்றும் மீதம் உள்ள 5 சதவீதம் சர்க்கரை சத்து உள்ளது. எனவே கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்க தர்ப்பூசணி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த பதிவில் தர்பூசணி பழத்தின் மருத்துவ குணங்கள் (Health Benefits of Watermelon) பற்றி காணலாம்.

இதையும் படிங்க: செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

சிறுநீரக செயல்பாடு
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் மற்ற நேரத்தை விட தாகம் அதிகம் எடுக்கும். இந்த காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்ப்பூசணி பழங்களை சாப்பிடலாம். இதனால் சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். மேலும் நீர் கடுப்பு, நீர் சுருக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
இரத்த ஓட்டம்
நமது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். இரத்த ஓட்டம் சீராக இருக்க இரத்தத்தில் நீர்சத்து குறிப்பிட்ட அளவு இருப்பது அவசியம். கோடை காலத்தில் நமது உடலில் உள்ள நீர்சத்தானது வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் இரத்தஓட்டம் குறைந்து சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தர்ப்பூசணி சாப்பிடுவதால் இரத்தத்தில் நீர்சத்து அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
உடல் குளிர்ச்சி
தர்ப்பூசணி பழத்தை சாறு எடுத்து அதனுடன் இளநீர் கலந்து குடித்தால் நமது உடலில் உள்ள வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். மேலும் இதனால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுகிறது.
மலச்சிக்கல்
நார்ச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மேலும் நமது வயிற்றில் நீர்ச்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்படும். தர்ப்பூசணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தர்ப்பூசணி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையலாம்.
உடல் புத்துணர்ச்சி
தர்ப்பூசணி பழத்தில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நமது உடல் உடல் உறுப்புகள் சீராக இருக்கவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகிறது.
உடல் எடை குறைத்தல்
தர்ப்பூசணி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க கூடிய வேதிப்பொருட்கள் உள்ளது. தினமும் காலை தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம். மேலும் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கலாம்.
ஆண்மை குறைபாடு
தர்ப்பூசணி பழத்துடன் பால் கலந்து குடித்தால் தொண்டை வலி சரியாகும். மேலும் தர்ப்பூசணி பழம் நமது உடலின் ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும். ஆண்மை குறைபாட்டை போக்கும் சிட்ருலின் சத்து தர்ப்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை பகுதியில் அதிகளவு உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தர்ப்பூசணி பழத்தில் உள்ள வெள்ளை பகுதியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாட்டிலிருந்து குணமடையலாம்.
இதய பாதுகாப்பு
தர்ப்பூசணி பழம் இதய பாதுகாப்பில் முக்கியபங்காற்றுகிறது. இதய பாதுகாப்பிற்கு நமது உணவில் அதிகளவு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்ப்பூசணி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
மாலைக்கண் நோய்
தர்ப்பூசணி பழத்தில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இவை நமது உடல் மற்றும் கண்பார்வை நலத்திற்கு மிகவும் அவசியமாகும். நமது கண்களில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவுகிறது. மாலைக்கண் நோய் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையலாம்.
புற்றுநோய்
தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதால் நமது உடலில் புற்றுநோய் தடுக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் தர்ப்பூசணி சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment