உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

What is Sabja Seeds | சப்ஜா விதை என்றால் என்ன?

சப்ஜா விதைன்னு (Sabja Vidhai) நிறைய பேர் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு சிலர்க்கு சப்ஜா விதைன்னா என்னனு கூட தெரியாது. சப்ஜா விதைன்னா வேற ஒன்னும் இல்ல நம்ம ஊருல கிடைக்குற திருநீற்று பச்சிலையோட விதை தான் இந்த சப்ஜா விதை. பார்க்க சாதாரணமாத்தான் தெரியும்.ஆனால் சப்ஜா விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள் (Health benefits of Sabja seeds) உள்ளன. இதை பயன்படுத்தி கூல்டிரிங்ஸ் மற்றும் ஜூஸ் கூட தயாரிக்கலாம். இதை பால், நீர் அல்லது நன்னாரி சர்பத்தில் போட்டு குடிக்கலாம்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

How to Use Sabja Seeds? | சப்ஜா விதையை பயன்படுத்துவது எப்படி?

ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் போட்டு ஊறவைத்தால் அது பன்மடங்காக அதிகரிக்கும். இரவில் ஊறவைத்து காலையில் பார்க்கும் போது சவ்வரிசி போன்று இருக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை ஊறவைக்காமல் அப்படியே சாப்பிட கூடாது. இது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.

Sabja seeds Health benefits in Tamil | சப்ஜா விதையின் பயன்கள்

 • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 • வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து.
 • சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
 • சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. உடல் சூட்டை குறைத்து நமது உடலை சீரான வெப்பநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. எனவே இதை கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுத்தலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதை மதியம் இளநீரில் போட்டு குடிக்கலாம்.
 • பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை (LEUCORRHEA) குணப்படுத்த உதவுகிறது.
 • மூலநோயால் (Hemorrhoids) பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூலநோய்க்கு நல்ல ஒரு மருந்து.
 • மஞ்சள் காமாலை (Jaundice) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சப்ஜா விதையை இளநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்.
 • பித்தத்தை குறைக்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் (Constipation) நோயால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை போட்டு சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு மருந்து.
 • சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், சிறுநீரக எரிச்சல் (Kidney irritation) மற்றும் சிறுநீர் தொற்று (Urinary tract infection) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
 • வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல், வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
 • ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

English Summary:

Sabja seed has various medical qualities. Soak a teaspoon of Sabja in water and it will multiply. The Sabja seeds are high in fiber. Do not eat it without soaking it. It is a good remedy for diseases such as diarrhea, diabetes, hemorrhoids, jaundice, constipation and body heat.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்… உங்களின் கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.

4 thoughts on “உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை”

Leave a Comment