Health Benefits of Red Banana | செவ்வாழையின் மருத்துவ குணங்கள்
செவ்வாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. செவ்வாழையில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி (Vitamin C) அதிகமாக உள்ளது. இது நமது உடலை இதய நோய் மற்றும் புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் (Health Benefits of Red Banana) ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்
- மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழையில் மிகவும் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை ஒரு செவ்வாழை சாப்பிட்டு வரலாம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
- குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தினமும் ஆளுக்கு ஒரு செவ்வாழை சாப்பிட்டு அரை டீஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக கருத்தரிக்கும்.
- ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழை என தொடர்ந்து 48 நாட்கள்சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நரம்புகள் பலம் பெரும், ஆண்மைத்தன்மை அதிகரிக்கும்.
- கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என்று 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
- மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என 40 நாட்கள் இரவு உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.
- செரிமான கோளாறு, மலச்சிக்கல் (Constipation) மற்றும் மூல நோய் (Hemorrhoids) உள்ளவர்கள் தினசரி ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நோயிலிருந்து படிப்படியாக குணமடையலாம்.
- சருமநோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சருமநோய் குணமாகும்.
- நரம்புத்தளர்ச்சி (Hysteria) உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெரும்.
- உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வாரம் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். செவ்வாழை நோய் தொற்று கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கலாம்.
- தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பற்களின் ஈறுகள் பலம் பெரும். பல்வலி குணமாகும். ஆடும் பற்கள் கெட்டியாகும்.
- கருவுற்ற பெண்களுக்கு காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு போன்றவை ஏற்படும். இந்நேரத்தில் உடலில் சத்து தேவைகளை பூர்த்தி செய்ய செவ்வாழையை சாப்பிடலாம்.
- கருவுற்ற பெண்கள் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். செவ்வாழையில் உள்ள அதிகளவு பொட்டாசியம் தாய்க்கும் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
இதையும் படிங்க: பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…