நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

Health Benefits of Nuts | நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நட்ஸ்(Nuts) மற்றும் உலர் பழங்கள் (Dry fruits) முக்கியப் பங்கு வகிக்கின்றன. நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்தப் பதிவில் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(Health Benefits of Nuts) என்னென்ன என காணலாம்.

இதையும் படிங்க: பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வால்நட்

வால்நட்டில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இது சிறந்த ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரியாக செயல்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
வால்நட்டில் உள்ள அதிகப்படியான மெலடோனின் நன்றாக ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) எனப்படும் ‘சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்படாமல் காக்க இதில் உள்ள ஏ.எல்.ஏ(Alpha-Linolenic-Acid) உதவுகிறது. இதில் உள்ள அதிகமான பாலிபினால் கல்லீரல் பிரச்சனையை தடுக்க வால்நட்(Walnut) உதவுகிறது.
தினமும் 75 கிராம் அளவுக்கு வால்நட் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும். மேலும் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பிஸ்தா பருப்பு

பிஸ்தாவில்(Pista) உள்ள அதிகளவு காரோட்டினாய்டுகள் கண்ணுக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் நமது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை(Digestive) எளிதாக்குகிறது.
இதய இரத்த குழாய் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க இதில் உள்ள வைட்டமின் பி உதவுகிறது. மூளைச் செல்களுக்கு புத்துணர்வு அளித்து சுறுசுறுப்பாக செயல்பட தூண்ட இதில் உள்ள ரிபோஃபிளேவின் மற்றும் எல் கார்னிடைன் உதவுகிறது. இதில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள அதிகளவு வைட்டமின் இ செல்களை புத்துணர்வோடு வைத்து முதுமையை தாமதப்படுத்துகிறது.

அத்திப்பழம்

அத்திப்பழம்(Fig Fruit) சிறுநீரகக்கல் பிரச்சனைக்கு உதவுகிறது. முதுமையை தாமதமாக்குகிறது. இதில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் உறுதிக்கு (Stability of the bones) உதவுகிறது. இதில் உள்ள அதிகளவு வைட்டமின் சி தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை(Ulcer) ஆற்ற உதவுகிறது.
அத்திப்பழத்தில் நமது உடலுக்கு தினமும் தேவைப்படும் நார்ச்சத்தில் 6 சதவீதம் அளவு  உள்ளது. தினசரி இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல்(Constipation) சரியாகும்.
தினமும் மூன்று அல்லது நான்கு அத்திப்பழங்களை சாப்பிட்டுவந்தால் உடல் நன்றாக பொலிவு பெரும். இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ்(Menopause) கடந்த பெண்கள் தினமும் அத்திப்பழம் சாப்பி வரலாம்.

உலர் திராட்சை

உலர் திராட்சையில்(Dry Grapes) உள்ள அதிகளவு நார்ச்சத்து மலச்சிக்கல் (Constipation) ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அசிடோசிஸ்(Acidosis) எனப்படும் அமிலத்தன்மை அதிகரிக்கும் பிரச்சனையை தடுக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்தானது அனீமியாவை(Anemia) தடுக்க உதவுகிறது.
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள போரான் நமது உடல் கால்சியம் சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிபெறும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கண்களுக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில்(Dates) வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 10 பேரீச்சம்பழங்களை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் (Constipation) பிரச்சனையில் இருந்து விரைவில் குணம் பெறலாம்.
பேரீச்சம்பழத்தில் உள்ள அதிகளவு பொட்டாசியம் வயிற்று கடுப்புக்கு(Abdominal cavity) நல்லது. தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புமண்டலம்(Nervous System) மேம்படும். மேலும் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

முந்திரி பருப்பு

முந்திரியில்(Cashew) புரதச்சத்து அதிகம் உள்ளது. முந்திரி புற்றுநோய்(Cancer) ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (immunity Power) உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.
முந்திரியில் உள்ள மக்னீசியம் சத்தானது பெண்களுக்கு மெனோபாஸ்(Menopause) காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள தாமிரம் போன்ற தாதுஉப்புக்கள் நமது உடலின் இரத்தநாளங்கள் மற்றும் எலும்பு மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள துத்தநாகம் நமது உடலின் சீரான வளர்ச்சி மற்றும் செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு(Almond) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க(Weight Loss) உதவுகிறது. புற்றுநோய் கட்டிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் இயக்கம் சீராக செயல்பட உதவுகிறது. இதய இரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.
தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்(Constipation) பிரச்சனையில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இது இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள ஸ்கால்ப்(Scalp) பகுதியின் ஆரோக்கியம் மேம்படவும். இதனால் கூந்தல் வளர்ச்சி(Hair growth) அதிகரிக்கும் மற்றும் சருமம் பொலிவு(Skin brightness) பெரும்.

வாதுமை

வாதுமையில்(Almond) கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், மக்னீசியம், தாமிரச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுஉப்புக்கள் அதிகம் உள்ளது. கருவுற்ற பெண்கள் வாதுமை சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் நியூரல் ட்யூப் டிஃபெக்ட்ஸ்(Neural tube defects) ஏற்படாது.
வாதுமையில் உள்ள ஓலீக் ஆசிட் மற்றும் லினோலீக் ஆசிட் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் புற்றுநோய்க்கு(Cancer) எதிராக போராடும் தன்மை உடையது. மேலும் இதில் உள்ள ஃபோலேட் சத்தானது இரத்தசோகையை(Anemia) தடுக்க உதவுகிறது.

ஆப்ரிகாட்ஸ்

ஆப்ரிகாட்ஸில்(Apricots) உள்ள அதிகளவு இரும்புச்சத்தானது இரத்தசோகையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அதிகளவு பீட்டாகரோட்டின் மற்றும் கரோட்டினாய்டு நமது கண்களுக்கு நல்லது. மேலும் இதில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்(Antioxidant) நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை(immunity) மேம்படுத்த உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலின் ஜீரண சக்தி(Digestive power) மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை(Constipation) கட்டுப்படுத்த உதவுகிறது. சருமத்தை பொலிவாக வைத்திருக்க இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் உதவுகிறது.

எப்போது சாப்பிடலாம்?

நட்ஸை உணவு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பின்னரோ அல்லது சாப்பிடும் முன்னரோ சாப்பிட கூடாது. உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அல்லது சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் தான் சாப்பிட வேண்டும். காலை 11 மணி, மதியம் 3 மணி அல்லது சாயங்காலம் 6 மணி இதில் ஏதேனும் ஒரு நேரத்தில் சாப்பிடலாம்.

எவ்வளவு சாப்பிடலாம்?

  • பாதம் பருப்பு – 4-7
  • வால்நட் – 3-5
  • பேரீச்சம்பழம் – 1-2
  • பிஸ்தா பருப்பு – 5-10
  • உலர் திராட்சை – 7-10
  • முந்திரி பருப்பு – 5-7
  • ஆப்ரிகாட்ஸ் – 3-5
  • அத்திப்பழம் – 2-3

தினமும் ஒரு நட்ஸ், ஒரு உலர் பழம் என்றோ அல்லது அனைத்தும் கலந்து 20 கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிடலாம்.

English Summary:

Nuts and dry fruits play an important role in protecting our health. They contain various nutrients that are essential for our health. Nuts should not be eaten before, during or after meals. Eat only two hours after a meal or two hours before eating. Eat a daily amount of nuts, dried fruit, or all of them, in 20 grams.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment