பூண்டின் மருத்துவ குணங்கள்

Health Benefits of Garlic in Tamil | பூண்டின் மருத்துவ குணங்கள்

நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது, அது உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும் உடல்நலம் மேம்படவும் ஒரு சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படி சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமான ஒரு உணவுப்பொருள் தான் பூண்டு. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள்(Garlic Health Benefits) உள்ளன.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

பூண்டு(Garlic) என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம் ஆகும். அதிலும் வெறும் வயிற்றில் பூண்டு உண்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று இங்கே காணலாம்.

பலன்கள்

  1. பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும்.
  2. பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.
  3. பூண்டு ஒரு சிறந்த ஆண்டி-பயாடிக் ஆக செயல்படுகிறது.
  4. ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  5. வெறும் வயிற்றில் பூண்டு உண்பதால் கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவை சரியாக செயல்படும்.
  6. வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம்(Indigestion), பசியின்மை(Appetite)  போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது.
  7. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம்.
  8. ரத்தம் அழுத்தத்தை(Blood Pressure) சரியான நிலையில் இருக்க வைத்து, இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  9. வெறும் வயிற்றில் பூண்டு உண்பதால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும். அதேபோல் புழுக்களும் வெளியேறி விடும். உடலை சுத்திகரிப்பதில் முக்கியபங்காற்றுகிறது.
  10. காச நோய்(Tuberculosis), நிமோனியா(Pneumonia), நெஞ்சு சளி(Phlegm), ஆஸ்துமா (Asthma) போன்ற நோய்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கிறது.

ஒரு நாளை ஒன்று அல்லது இரண்டு பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment