பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்

Dates | பேரீச்சம்பழம்

இயற்கையானது நமது மனிதகுலத்திற்கு பல்வேறு பழங்களை கொடையாக வழங்கியுள்ளது. இந்த பழங்களில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாகப் பழங்களை எல்லோரும் விரும்பி சாப்பிடக் காரணம் அதன் கவர்ந்திழுக்கும் நிறம் மற்றும் மணம் தான். தினமும் எதாவது ஒரு பழத்தை உட்கொள்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு சில பழங்களை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். ஒரு சில பழங்களை பதப்படுத்தி சந்தைக்கு வந்தவுடன் வாங்கி சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு வரும் ஒரு வகை பழம் தான் பேரிச்சம்பழம். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மருத்துவக் குணங்கள்(Health benefits of Dates) நிறைந்து உள்ளது. பேரிச்சம்பழம் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மை கொண்டது. மேலும் பேரீச்சம்பழத்தை பதப்படுத்தினாலும் தனது பலனை இழக்காமல் இருக்கும்.

பேரீச்சம் மரம் வளர ஏற்ற சீதோஷணம் பாலைவனப்பகுதி மட்டுமே. நம் நாட்டில் பேரீச்சம்பழம் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பேரீச்சம்பழம் பழுக்கத் துவங்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும். நன்கு பழுத்த பின்னர் அவற்றைப் பறித்து பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்

பேரிச்சம்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. பேரீச்சம்பழத்தில் பின்வரும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

 • கால்சியம்
 • மாங்கனீசு
 • தாமிரம்
 • மக்னீசியம்
 • இரும்புச்சத்து
 • நார்ச்சத்து
 • வைட்டமின் A
 • வைட்டமின் B
 • வைட்டமின் B 2
 • வைட்டமின் B 5
 • வைட்டமின் E

இந்த பதிவில் பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்(Health benefits of Dates) பற்றி காணலாம்.

Health benefits of Dates | பேரீச்சம் பழத்தின் மருத்துவக் குணங்கள்

கண் நோய்கள்

பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் வராது. மேலும் கண் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் சரியாகும். வைட்டமின் A குறைபாட்டால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. பேரீச்சம்பழத்தில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. எனவே கண் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

பற்களுக்கு பாதுகாப்பு

பேரீச்சம்பழத்தில் உள்ள ஃப்ளோரின் என்னும் சத்து பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் பல்சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. பற்சொத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

உடல் வலிமை

பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்றவை நமது உடலுக்கு தேவையான வலிமையும், சக்தியும் உடனுக்குடன் கிடைக்கச் செய்கிறது. மேலும் உடல் வலிமையை பெருகக் செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.

குழந்தை வளர்ச்சி

ஒரு சில குழந்தைகள் உடலில் பலம் இல்லாமல் மெலிந்து சோர்வுடன் இருப்பார்கள். அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் பெருக்காது. மேலும் கால் மூட்டிகளில் வலி அடிக்கடி ஏற்படும். இதற்கு காரணம் கால்சியம் சத்து குறைபாடு ஆகும். இதற்கு பேரீச்சம்பழத்தை தேனுடன் நன்றாக ஊறவைத்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் பலம் பெரும். மேலும் குழந்தைகள் எப்பொழுதும் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

உடல் எடை அதிகரிப்பு

பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.

உடல் எடை குறைப்பு

பேரீச்சம்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அனால் கலோரிகள் 23 தான் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். உடல் சோர்வும் ஏற்படாது. உடல் எடையும் குறையும்.

இதய நோய்

இதய நோய் உள்ளவர்கள் தினசரி ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். மேலும் இதய வலி உள்ளவர்கள் பேரீச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் குணமாகும். பேரீச்சம்பழத்தை பாலில் நன்றாக வேக வைத்து சாப்பிட்டு பாலை குடித்து வந்தால் இதய நோய்கள் வராது.

எலும்புகளின் வலிமை

பேரீச்சம் பழத்தில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் தாது உப்புகள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு இணைப்பு ஜவ்வு குறைபாடு உள்ளவர்கள் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட்டு  வந்தால் குணம் பெறலாம். பேரீச்சம்பழத்தை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து நன்றாக மசித்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் அதிகரிக்கும்.

செரிமான பிரச்சனை

பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நமது குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக இருந்து உணவு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனால் நாம் சாப்பிட்ட உணவு எளிதாக செரிமானம் ஆகும். மேலும் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் வருவதில்லை.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும். பேரீச்சம்பழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் நன்றாக ஊற வைத்து காலையில் எழுந்து அதனை சாப்பிட்டு வர வேண்டும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் பேரீச்சம்பழத்தின் முழு பலனையும் நாம் பெறலாம். மேலும் மலச்சிக்கலும் சரியாகும்.

தினமும் இரவு 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும். தினமும் இரவு பேரீச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் சரியாகும்.

குடல் நோய்கள்

பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் வராது. குடல் பிரச்சனைகள் ஏதும் இருந்தாலும் சரியாகும். மேலும் வயிறு மற்றும் குடலில் உள்ள நுண் கிருமிகள் அனைத்தும் வெளியேறும்.

சரும பாதுகாப்பு

பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது. வெண்குஷ்டம் உள்ளவர்கள் தினமும் பேரீச்சம்பழச்சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம்

பேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இரத்த சோகை

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இரத்தச்சோகை பிரச்சனை சரியாகும்.

தினமும் காலை கறிவேப்பிலை இலை 1௦ உடன் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும். மேலும் இரத்தச் சோகையும் முற்றிலும் குணமடையும்.

இரத்தம் உற்பத்தி

தினமும் 2 பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் இரத்தம் உற்பத்தி அதிகரிக்கும். விபத்துகளில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதனால் இரத்தம் உற்பத்தி அதிகரித்து இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை உணவு உண்ட பின்னர் 2 அல்லது 3 பேரீச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

சளி மற்றும் இருமல்

சளி மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த மருந்து பேரிச்சம்பழம். சளி மற்றும் இருமலால் அவதிப்படுப்பவர்கள் பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு நன்கு காய்ச்சி ஆறிய பின்னர் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு பாலையும் குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் கபம் குணமாகும். மேலும் இதனை குழந்தைகளும் கொடுக்கலாம்.

பெண்களுக்கு உதவும் பேரிச்சம்பழம்

 • பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் பொழுது மற்றும் பிரசவத்தின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும். இந்த அதிக இரத்தப்போக்கை ஈடு செய்து புதிய இரத்தத்தை உற்பத்தி செய்ய பேரீச்சம்பழம் உதவுகிறது.
 • சீரற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
 • பேரீச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்ற சத்துக்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • கருவுற்ற பெண்கள் பேரீச்சம்பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் இரத்தத்தின் அளவு குறையாமல் பாதுகாக்க உதவுகிறது.
 • பொதுவாகவே பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகளவு தேவைப்படும். பெண்களின் மாதவிலக்கு காலத்தில் இவை குறைவாக இருக்கும். இந்த குறைபாட்டை நிவர்த்திசெய்ய பேரிச்சம்பழம் உதவுகிறது.
 • கருவுற்ற பெண்கள் தினமும் 5 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

மெனோபாஸ்

பெண்களுக்கு 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் அவர்களின் மாதவிலக்கு முழுமையடையும். இந்த காலகட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் அவர்களின் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படும். இதற்கு பேரீச்சம்பழத்தை பாலில் கொதிக்கவைத்து பாலையும், பழத்தையும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மூட்டு வலி

மூட்டு வலி மற்றும் Osteoporosis பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரீச்சம்பழம் ஒரு நல்ல தீர்வாகும். இது கால்சியம் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது. எனவே தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெறலாம்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கை, கால் தளர்ச்சியும் குணமாகும். பேரீச்சம்பழத்துடன் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

இரத்தக்குழாய் அடைப்பு

பேரீச்சம்பழத்தை விதை நீக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு அதனுடன் தேன் ஊற்றி, மூன்று நாட்கள் ஊறியதும், தினமும் காலை மற்றும் இரவு என இருவேளை மூன்று பழங்கள் என தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment