பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Health Benefits of Almonds | பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நம் உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு சில உணவுகள் நமக்கு நன்மை விளைவிக்கும். மேலும் ஒரு சில வகை உணவு பொருட்கள் நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருக்கும். அந்த வகையில் நமக்கு நன்மை தரக்கூடிய உணவு பொருட்களில் பாதாம்(Almond) ஒன்று. தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் (Health Benefits of Almonds) கிடைக்கிறது.

தினசரி பாதாம் சாப்பிடுவதால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். நாம் சாப்பிடும் பாதாமில் பல்வேறு நன்மைகள் உள்ளது. உச்சந்தலை முதல் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இது சிறந்த ஒரு தீர்வை தரும். தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு பிரச்சினை முதல் அனைத்து வகையான நோய்களுக்கும் நல்ல ஒரு மருந்தாக உள்ளது. தினமும் பாதாம் சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம்.

இதையும் படிங்க: பூண்டின் மருத்துவ குணங்கள்

கொலஸ்ட்ரால் குறைப்பு

தினசரி பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் நன்மை, நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள்(Fats) குறைவது. குறிப்பாக இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது நமது உடல் பருமனை சீராக வைக்க உதவுகிறது.

முக சுருக்கம் நீங்க

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் நமது இளமையின் முடிவு. என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரின் பேராசை. தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றன. பாதாமில் உள்ள  மக்னெஸ் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைய வைக்க உதவுகிறது.

இதய பாதுகாப்பு

பாதாம் நமது இதய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினசரி பாதாம் சாப்பிடும் போது, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்(Antioxidants), மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி நம்மை இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

உடல் எடை குறைப்பு

தற்போது பலரின் முக்கியமான பிரச்சினை உடல் பருமன் தான். உடல் பருமன் தான் பல்வேறு நோய்களுக்கு மூலகாரணம். தினமும் பாதாம் சாப்பிடும் போது மிகவும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேடுகளை எடுத்து கொள்ளும். எனவே, உடல் எடை குறைக்க(Weight Loss) நினைப்பவர்கள் தினசரி பாதாம் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

மூளை சுறுசுறுப்பு

மூளை நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்ய தினசரி பாதாம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ(Vitamin E) நமது மூளையின் செயல்திறனை அதிகரித்து நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

முடி வளர்ச்சி

பாதாம் முடி உதிரும் பிரச்சனையில் இருந்து தீர்வு அளிக்கிறது. பாதாமில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் முடியின் வேர் பகுதியை வலுவாக்கி முடி உதிர்வை தடுக்கிறது. மேலும் அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. 

வயிற்று பிரச்சனைகள்

தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். வயிறு வலி, செரிமான கோளாறு, அடிக்கடி வாயில் ஏற்படும்  துர்நாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பாதாம் நல்ல ஒரு மருந்து.

எப்படி சாப்பிடலாம்…!

பாதாமை எப்படி சாப்பிட்டால் நல்லது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். வறுத்து சாப்பிடலாமா? அல்லது பச்சையாக சாப்பிடலாமா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. உண்மையாக பாதாமை வறுக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் அதிக பலன் தரும். பாதாமை நீரில் நன்கு ஊற வைத்து சாப்பிடுவதும் நல்லது.

தினம் 4 பாதாம்..?

ஏன் தினமும் 4 பாதாம்..? இந்த கேள்வி அனைவரின் மனதினுள்ளும் இருக்கும். ஏனெனில் நாம் தினசரி சாப்பிடும் பாதாமில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது பொருட்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், மக்னேசியம், பாஸ்பரஸ் என நமக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பாதாமில் அதிகமாக உள்ளது.

அளவுக்கு மீறினால்… அமிர்தமும் நஞ்சு..!

இந்த பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று. எந்த உணவு உட்கொண்டாலும் அதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக உள்ளது என்று அதிகமாக சாப்பிட்டால் அது நமக்கு தான் ஆபத்து. எனவே தினசரி 4 பாதாம் என்பதே நமது ஆரோக்கியத்திற்கு போதுமானது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment