கூந்தல் வேகமாக வளர டிப்ஸ்…!

Hair Growth Tips in Tamil | கூந்தல் வேகமாக வளர டிப்ஸ்

பெண்களின் அழகில் முதலிடம் வகிப்பது நீளமான கூந்தல் தான். ஆறடிக்கு மேலான கூந்தல் நீளம் உள்ள பெண்கள் அழகோ அழகு. அனால் இப்போதைய பெண்களுக்கு கூந்தல் ஒரு அடி வளருவது கூட மிகவும் அபூர்வமாக உள்ளது. கூந்தல் ஒரு அடி கூட வளரவில்லை என பெரும்பாலான பெண்கள் புலம்புகின்றனர். இந்தப் பதிவில் கூந்தல் நீளமாக மற்றும் வேகமாக வளர குறிப்புகளை(Hair Growth Tips in Tamil) காணலாம்.

இப்பொது உள்ள பெண்களுக்கு கூந்தல் நீளமாக வளராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நம்மை சுற்றியுள்ள அதிகப்படியான மாசு, நீர், உண்ணும் உணவு வகைகள், மனஅழுத்தம் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த ஷாம்பு வகைகள் பயன்படுத்துவது தான்.

இதையும் படிங்க: பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

முந்தைய தலைமுறை பெண்கள் போன்று தற்போதைய பெண்கள் தங்களின் தலைமுடியை பராமரிப்பது மிகவும் குறைவு. கூந்தலின் அடர்த்தி குறைவாக இருக்க, இளநரை அதிகமாக இருக்க மற்றும் கூந்தல் வறட்சிக்கு முக்கிய காரணம் சரியான பராமரிப்பின்மையே ஆகும்.

அடிக்கடி கூந்தலை ட்ரிம் செய்ய வேண்டும்

கூந்தல் அடர்த்தியின்மைக்கு முக்கிய காரணம் கூந்தல் வறட்சி(Hair Dryness) தான். இதனால்முடி உதிர்வதும் அதிகரிக்கிறது. கூந்தல் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான மாசு மற்றும் உப்புநீர் தான். 6 மாதத்திற்கு ஒருமுறை கூந்தலின் நுனியை ட்ரிம் செய்து வந்தால் அதிகப்படியான முடி உதிர்வைத் தடுக்கலாம்.

சீப்பினால் அழுந்த சீவ வேண்டும்

தினமும் தலைமுடியை சீவும் போது சீப்பை ஸ்காலிப்பில் நன்றாக அழுந்த சீவ வேண்டும். இவ்வாறு சீவுவதால் கூந்தலின் வேர்கள் தூண்டப்படுகிறது. இதனால் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. புதிய மயிர்கால்கள் வளரும். முக்கியமாக முடி ஈரமாக இருக்கும் போது சீப்பினால் சீவக்கூடாது. ஈரமாக இருக்கும் பொது முடி வலுவிழந்து இருக்கும், இந்த நேரம் சீவுவதால் முடி வேகமாக உதிரும்.

ஹேர் ட்ரையர் உபயோகித்தல் கூடாது

இயற்கையான முறையில் மட்டுமே கூந்தலை காயவைக்க வேண்டும். செயற்கையான முறையில் ஹேர் ட்ரையர்(Hair Dryer) மூலம் முடியை காயவைப்பதை நிறுத்த வேண்டும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கும் போது உண்டாகும் வெப்பத்தால் கூந்தல் விரைவில் பலம் இழக்கிறது. இதனால் முடி விரைவாக உதிரும்.

புரோட்டின் நிறைந்த உணவுகள்

நாம் புரோட்டின்(Protein) நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். இதனால் முடி வேகமாக வளரும். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுதல் அவசியம்.

அதிகளவு நீர் பருக வேண்டும்

நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் கூந்தல் உதிர்வு அதிகரிக்கும். கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் சுரப்பிகள் நன்றாக வேலை செய்ய நீர்சத்து அவசியம். எனவே நமது உடலுக்கு தேவையான நீரை சரியாக குடிப்பதால் கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் சுரப்பிகள் சரியாக வேலை செய்யும். மேலும் கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

வெளிப்புற பராமரிப்பு

நமது கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை போல நமது கூந்தலுக்கு வெளிப்புற பராமரிப்பும் அவசியம். பால்(Milk), முட்டை(Egg), தேன்(Honey) போன்றவை கூந்தலுக்கு வளம் சேர்ப்பவை. எனவே முட்டை, பால் மற்றும் தேன் போன்றவற்றை வாரம் ஒருமுறை உபயோகிக்க வேண்டும்.

ஆயில் மசாஜ்

ஒரு வாரத்திற்கு இரண்டு தடவை ஆயில் மசாஜ்(Oil Massage) செய்வதால் முடியின் வேர்க்கால்கள் தூண்டப்படுகின்றன. இதனால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஆலிவ் எண்ணெய்(Olive Oil), நல்லெண்ணெய்(Sesame Oil) மற்றும் தேங்காய் எண்ணெய்(Coconut Oil) போன்றவை நமது தலைப்பகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment