பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

Hair Care Tips in Tamil | பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

பெண்களின் தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ… நீளத்தைவிட அடர்த்தியாக இருப்பதுதான் ஆரோக்கியமானது. கூந்தல் உதிர்வு(Hair Loss), இளநரை, பொடுகு(Dandruff) போன்ற பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு காண்பது சிறந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் நீங்கள் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். எந்த வயதிலும் நீங்கள் கூந்தல் அழகியாக ஜொலிக்க எளிய முறையிலான கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை(Hair Care Tips in Tamil) இந்தப் பதிவில் காணலாம்.

இதையும் படிங்க: முகப்பரு வராமல் தடுக்க வீட்டு மருத்துவம்

கூந்தல் பராமரிக்க டிப்ஸ்:
 • வெந்தயம்(Dill) சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலைமுடி நன்றாக பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
 • ஒரு பிடி வேப்பிலையை(Neem Leaves) எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன்(Lice) இருந்தாலும் ஒழிந்து போகும்.
 • நரை முடி பிரச்சனை(White Hair Problem)உள்ளவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும்(Auri Leaf), மருதாணி இலையையும்(Henna leaf) இடித்துத் தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.
 • தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
 • கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
 • தேவையான அளவு மருதாணி(Henna) இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். மேலும் உடல் சூடும் குறையும்.
 • நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
 • கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
 • நெல்லிக்காயை(Gooseberry) அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். தலைமுடியும் நன்கு செழுமை பெறும்.
 • முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
 • இருபது செம்பருத்திப் பூக்களைப்(Hibiscus Flower) பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, நன்றாக சூடு குறைந்த பின்னர் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தால் முடி நன்றாக செழித்து வளரும். மேலும் முடி உதிர்வதும் நின்றுபோகும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment