தொப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்

Exercises to reduce Belly Fat | தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்

தற்போது பெரும்பாலான மக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது தொப்பை மட்டுமே. தொப்பையை குறைக்க ஓடுவது அல்லது நடப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள தொப்பை குறைவது மட்டுமல்லாமல், உடலின் பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்து விடுகின்றது. உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைகிறது. இந்த பதிவில் தொப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்(Exercises to reduce Belly Fat) பற்றி காணலாம். இந்த உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை

நாம் இளம் வயதில் வைத்திருந்தது போல வலுவான மூட்டுகள் வயது அதிகரிக்கும் பொது இருப்பதில்லை. இதனை மீட்டுக் கொண்டு வர ஜாக்கிங் அல்லது வாக்கிங் மட்டும் சரியாக இருக்காது. அதற்கு சரியான தீர்வு சைக்கிளிங் மட்டுமே. சைக்கிள் பயிற்சி இல்லாமல் தொப்பை குறைப்பு சாத்தியமில்லை. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவடையச் செய்ய வேண்டும். சைக்கிள் பயிற்சி செய்வதன் மூலம், அடிவயிறு சீரடைதல், உடல் சுழற்சி, தசைகள் செயல்பாடு அதிகமாதல் ஏற்படும்.

இதையும் படிங்க: தொப்பையை குறைக்க டிப்ஸ்

சீராக தொப்பையை குறைக்க, சைக்கிளிங் மிகவும் உதவி செய்கிறது. மேலும் சைக்கிளில் பயணிப்பதன் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வரலாம் என்பது கூடுதல் பயன். சைக்கிளின் வேகம், பயிற்சியின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, 30 நிமிடத்தில் 250 முதல் 500 கலோரிகள் கரைக்கலாம்.

ஒரு பெரிய ரப்பர் பந்தில், உடலை கிடத்தி கைகளை மார்பின் குறுக்காகவோ அல்லது தலைக்கு பின்புறமாகவோ வைக்கவும். உடலை பக்கவாட்டிலும், முன்னும், பின்னும் நகர்த்தி பயிற்சி செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலமாகவும் அதிக அளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி மூலமாகவும் தொப்பையை அதிகளவு குறைக்கலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்

பின்புறமாக உடலை சாய்த்து, முன்னால் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு தொப்பை குறைப்பு என்பது சாத்தியமாகிறது. தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தியும், உடலை 90 டிகிரிக்கு உயர்த்தியும் பயிற்சி செய்யலாம்.

தரையில் படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு நேராக உயர்த்த வேண்டும். அப்போது தலையும் சிறிது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அதிக கலோரிகளை எரிக்கலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம்

கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடைய வேண்டும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை செய்யும் போது உணரலாம்.

தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மூலமாகவும் தொப்பையை குறைக்க(Exercises to reduce Belly Fat) முடியும்.

இதையும் படிங்க: எளிய முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வர வேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment