உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்

Health Benefits of Raisins | உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சைப் பழங்களில் உயர்தரமான திராட்சைப் பழங்களை நன்றாக பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த உலர் திராட்சைகள். கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் இந்த உலர் திராட்சையில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகளவு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இந்த பதிவில் உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்(Health Benefits of Raisins) பற்றி காணலாம்.

இதையும் படிங்க: நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

உலர் திராட்சையில் வைட்டமின் B(Vitamin B) மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் அதிகளவு சுக்ரோஸ்(Sucrose) மற்றும் ப்ரக்டோஸ்(Fructose) நிறைந்துள்ளது. உலர் திராட்சையில் வைட்டமின் B, வைட்டமின் C(Vitamin C), அமினோ அமிலங்கள்(Amino acids), இரும்புச்சத்துகள், பொட்டாசியம்(Potassium), கால்சியம்(Calcium) மற்றும் மக்னீசியம்(Magnesium) போன்ற சத்துக்கள் அதிகளவு உள்ளது.

இதையும் படிங்க: பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்தசோகை
இரத்தத்தில் ஹீமோகுளோபின்(Hemoglobin) அளவு குறைவாக உள்ளவர்கள் உலர் திரட்சையை சாப்பிட்டு வந்தால் இரத்தசோகையை(Anemia) குணப்படுத்தலாம். உலர் திராட்சையில் உள்ள தாமிரச்சத்து இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய்(Jaundice) உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய்(Jaundice) குணமாகும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல்(Constipation) பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு உலர் திராட்சை பழங்களை எடுத்து பாலில் போட்டு நன்றாக காய்ச்சி, பழத்தை சாப்பிட்டு காய்ச்சிய பாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
மூலநோய்
மூல நோய்(Hemorrhoids) உள்ளவர்கள் தினமும் சாப்பிட்ட பின்னர் காலை மற்றும் மாலை என இருவேளையில் 25 உலர் திராட்சை பலன்களை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
எலும்பு வளர்ச்சி
உலர் திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது நமது உடலின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தை வளர்ச்சி
குழந்தைக்கு குடிக்க பால் காய்ச்சும் போது அதில் இரண்டு உலர் திராட்சைப் பழங்களை உடைத்து போட்டு பாலை நன்றாக காய்ச்சி பின்னர் வடிகட்டி கொடுத்தால் குழந்தை நன்றாக திடமாக வளரும்.
தொண்டை பிரச்சனை
தொண்டைக்கட்டு பிரச்சனை உள்ளவர்கள் இரவு சாப்பிட்ட பின்னர் 20 உலர் திராட்சை பழங்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி அதனுடன் சிறிதளவு பொடி செய்த வால்மிளகு மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சரியாகும்.
மாதவிலக்கு பிரச்சனை
சிறிதளவு உலர் திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் நன்றாக ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள்(Menstrual disorders) சரியாகும்.

மாதவிலக்கு ஏற்படும் நேரத்தில் வயிறு, மார்பு, விலா மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். இதற்கு சிறிதளவு உலர் திராட்சை பழங்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு தினமும் இருவேளை வீதம் குடிக்க வேண்டும்.

எலும்பு மஜ்ஜை
உலர் திராட்சையானது எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு மிகவும் உதவுகிறது. உலர் திராட்சையை வாயில் போட்டு சாறு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறக்குவதால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகமாக சுரக்கும். மேலும் உலர் திராட்சை இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
உடல்வலி
பெருஞ்சீரகத்துடன் சிறிதளவு உலர் திராட்சையை சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் உடல்வலி சரியாகும். மேலும் அடிக்கடி ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிட்டு வரலாம்.
கர்ப்பிணி பெண்கள்
தாயின் கருவறையில் வளரும் சிசுவிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாயிடம் இருந்துதான் கிடைக்கிறது. எனவே தாயின் ஆரோக்கியம் தான் முதலில் பேணப்பட வேண்டும். கருவுற்ற பெண்கள் பாலில் உலர் திராட்சையை போட்டு நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் பிறக்க இருக்கும் குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கும்.
நிம்மதியான உறக்கம்
தினமும் தூங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னர் பாலில் சிறிது உலர் திராட்சையை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

இதையும் படிங்க: பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment