Baby Stomach Pain Home Remedy
Baby Stomach Pain Home Remedy | பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்

Baby Stomach Pain Home Remedy | பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்

பெரும்பாலும் பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலி ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று. இந்த வயிற்று வலி ஏற்படும் போது குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம் பிறந்த குழந்தைக்கு குடலானது சிறிதாக இருக்கும். குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வரும். இதனால் குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. எனவே தான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலிக்கு கிரேப் வாட்டர் கொடுக்கலாம். கிரேப் வாட்டர் இல்லாத காலத்தில் இயற்கை வைத்தியம் மூலமே, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தினார்கள். குடல் வளர்ச்சியால் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த வயிற்று வலியை வீட்டு வைத்தியம் (Baby Stomach Pain Home Remedy) மூலம் குணப்படுத்தலாம்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தாய்ப்பால்

குழந்தைகளது உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு இந்த உலகத்தில் மிகச்சிறந்த மருந்து என்று ஒன்று உள்ளது என்றால் அது தாய்ப்பால்(Breastfeeding) தான். எனவே குழந்தைகள் தொடர்ச்சியாக வயிற்று வலியினால் அழும் போது, அவர்களுக்கு அவ்வப்போது தாய்ப்பால்(Breastfeeding) கொடுத்தால், அவர்களுக்கு வலி குறைவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் வரும்.

பட்டை

குழந்தைகளுக்கு உண்டாகும் செரிமானமின்மை மற்றும் வாயுத் தொல்லையை குணப்படுத்த பட்டை பெரிதும் உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியையும் சரிசெய்ய, பட்டையை டீ போட்டு கொடுக்கலாம்.

சீரகம்

சீரகம்(Cumin) குழந்தைகளின் குடலுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும் தன்மையுடையது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு சீரகம் ஒரு மிகச்சிறந்த மருந்து.

சோம்பு

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, சோம்பை ஒரு துணியில் போட்டு இறுக்கமாக கட்டி, அதனை தோசைக்கல்லில் தொட்டு, குழந்தையின் வயிற்றில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். சோம்பு(Anise) குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியைப் போக்கி நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

துளசி

மருத்துவ குணம் அதிகம் நிறைந்தது துளசி(Basil). இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியைப் போக்கி, நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறது. எனவே துளசி சாற்றை குழந்தைகளுக்கு வயிற்று வலியின் போது கொடுக்கலாம்.

புதினா

பிறந்த குழந்தையின் குடலில் கடுமையான பிடிப்பு இருக்கும், அது வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பிடிப்புக்களை போக்குவதற்கு புதினா(Mint) சாற்றினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர் குழாயிலிருந்து ஓடும் தண்ணீரிலோ அல்லது வாளியில் உள்ள நீரிலோ குழந்தையை உட்கார வைத்தால், வயிற்று வலி குணமாகும். குறிப்பாக அவ்வாறு உட்கார வைக்கும் போது, தண்ணீர் குழந்தையின் மூக்கு, கண் அல்லது காதுக்குள் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…