40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்.!!

Greens Benefits | 40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்.!!

கண் பார்வை சரியா தெரியலையா… அப்படின்னா பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிடனும். பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் பகலில் கூட நட்சத்திரம் பார்க்கலாம். வயிற்றுப்புண்ணா… மணத்தக்காளி கீரையைச் சாப்பிடனும். இருமல் குறையவே இல்லையா… தூதுவளைக் கீரையைத் துவையலாக்கி சாப்பிடனும். வாய்ப்புண்ணா… அகத்திக் கீரை சாம்பார் சாப்பிடனும் . மூட்டு வலியால அவதிப்படுறீங்களா… அப்படின்னா முடக்கத்தான் கீரைதான் சரியான சாய்ஸ்… மேற்கண்ட வைத்தியங்கள் எல்லாம் முன்பு நமது பாட்டிகள் சொன்னவை. இதையேதான் இன்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கீரைகளில் நமது உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் (Greens Benefits) உள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

மனித உடலில் வாயு, பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருந்தால் உடலில் எந்த விதமான நோய்களும் அண்டாது என்கிறது சித்த மருத்துவம். வாயு, பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைக்கும் அளவுக்கு அதிகமான சத்துக்களைக் கொண்டிருக்கிறது கீரை வகைகள். மேலும் ஒவ்வொரு கீரையிலும் அதற்கென்று தனித்துவமான சத்துக்களும் இருக்கிறது. பொதுவாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி, மற்றும் சி, தாது உப்புக்கள் மற்றும் பல்வேறு சத்துக்கள் கீரைகளில் நிறைந்திருக்கின்றன.

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த விதமான நோய்களும் நம்மை நெருங்காது.

அகத்தி கீரை

 • இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்க உதவுகிறது.
 • உடலின் வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது.
 • ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • 15 நாட்களுக்கு ஒரு முறை அகத்தி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும்.

சிறு கீரை

 • சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
 • பித்தம், கண் மற்றும் காச நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
 • முகம் பொலிவு பெற உதவுகிறது.
 • உடல் வலிமை பெற உதவுகிறது.

காசினிக் கீரை

 • சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்க உதவுகிறது.
 • உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
 • நீரிழிவு, வாதம், உடல் சூடு, மூட்டு வீக்கம் போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

சிறு பசலைக் கீரை

 • சரும நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
 • பால்வினை நோயை குறைக்கிறது.

பசலைக் கீரை

 • கண் எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப் போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் நீர் அடைப்புக்கு பசலைக் கீரை நல்ல மருந்து.
 • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
 • சீழ் பிடித்து வேதனை தரும் கட்டிகளின் மீது பசலைக் கீரையின் இலைகளை வதக்கி கட்டினால், கட்டி உடைந்து, சரியாகும்.
 • உடலின் தசைகள் பலம் பெற உதவுகிறது.

கொடி பசலைக் கீரை

 • வெள்ளை விலக்கும்
 • நீர் கடுப்பை குணப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் கரிசலை

 • கல்லீரலை பலப்படுத்த உதவுகிறது.
 • மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது.

குப்பைக் கீரை

 • பசி எடுக்காதவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.
 • உடலில் ஏதும் வீக்கம் இருந்தால் அதை வத்தவைக்கிறது.

அரைக் கீரை

 • ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
 • சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
 • மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு மருந்து.
 • உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
 • வாத நோய்களை கட்டுப்படுத்துகிறது.
 • அரைக் கீரை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை வலுப்பெறும்.

புளியங்கீரை

 • இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.
 • கண் தொடர்பான நோய்களை சரியாக்க உதவுகிறது.

பிண்ணாக்கு கீரை

 • வெட்டை நோயை(ஒரு வகையான பால்வினை நோய்) குணப்படுத்த உதவுகிறது.
 • நீர் கடுப்பை குணப்படுத்த உதவுகிறது.

பரட்டைக் கீரை

 • உடலில் உள்ள சுளுக்கு சரிசெய்கிறது.
 • பசி எடுக்காதவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.
 • மலக்கட்டு நீங்க உதவுகிறது.
 • ஜுரம் குறையும்.
 • பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

பொன்னாங்கன்னி கீரை

 • கண் வலி மற்றும் மூட்டு வலிக்கு பொன்னாங்கன்னி கீரை சிறந்த நிவாரணி.
 • பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஈரல் வலுப்படும் மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
 • மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்தது.
 • பொன்னாங்கன்னி கீரையில் உள்ள தங்க சத்து மேனி அழகை அதிகரிக்கும்.
 • கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.
 • மூல நோயை குணப்படுத்த உதவுகிறது.

சுக்காங் கீரை

 • அனைத்துவிதமான பித்தங்கள், குடல் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வாயு கோளாறு மற்றும் வாந்தி போன்றவற்றை நீக்கி பசி எடுக்க உதவுகிறது.
 • மதுவினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகிறது.
 • மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலம் பெற உதவுகிறது.
 • இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
 • இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
 • சிரங்கு மூலத்தை போக்குகிறது.

வெள்ளை கரிசலைக்கீரை

 • இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

முருங்கைக் கீரை

 • பித்தம், கண் நோய்கள் மற்றும் அக்கினி மந்தம் போன்றவை சரியாகும்.
 • முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் உள்ள நரம்புகள் வலிமையடையும்.
 • உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
 • ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
 • உடல் வலிமை பெற உதவுகிறது.
 • நீரழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது.

வல்லாரைக் கீரை

 • மூளை பலம் பெற உதவுகிறது.

முடக்கத்தான் கீரை

 • கை, கால் முடக்கத்தை நீக்குகிறது.
 • உடலில் வாயுவை நீக்குகிறது.

புண்ணக் கீரை

 • சிரங்கு மற்றும் சீதளத்தை விலக்க உதவுகிறது.

புதினாக் கீரை

 • உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
 • அஜீரணத்தில் இருந்து நிவாரணம் தருகிறது.

நஞ்சு முண்டான் கீரை

 • விஷத்தின் வீரியத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது.

தும்பைக் கீரை

 • அசதி மற்றும் சோம்பலை நீக்குகிறது.

கல்யாண முருங்கை கீரை

 • சளி மற்றும் இருமலை நீக்க உதவுகிறது.

முள்ளங்கி கீரை

 • நீரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

பருப்பு கீரை

 • இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
 • அனைத்துவிதமான வாதம், சரும நோய்கள், மேக ரோகங்கள், பித்த கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது.
 • உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

புளிச்ச கீரை

 • சொறி, சிரங்கு மற்றும் கரப்பான் போன்ற தோல் நோய்கள் சரியாகும்.
 • புளிச்ச கீரை சாப்பிடுவதால் விந்து பலப்படும்.
 • மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலம் பெற உதவுகிறது.
 • ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
 • உடல் வலிமை பெற உதவுகிறது.
 • மாலைக்கண் நோயை குணப்படுத்த உதவுகிறது.

மணலிக் கீரை

 • வாதத்தை விலக்கும் ஆற்றல் கொண்டது.
 • கபத்தை கரைக்கும் தன்மை உடையது.

மணத்தக்காளி கீரை

 • மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் வாய்ப்புண் மற்றும் குடல் புண் குணமாகும்.
 • மூலச்சூடு, உடல் சூடு, ஆசனக் கடுப்பு மற்றும் நீர்க் கடுப்பு போன்றவை நீங்கும்.
 • மூலம் மற்றும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
 • உடலில் ஏற்படும் தேமல் அகலும்.

முளைக் கீரை

 • முளைக் கீரையானது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு சிறந்தது.
 • முளைக் கீரை சாப்பிடுவதால் சிரங்கு மற்றும் சரும நோய்கள் குணமாகும்.
 • தலைமுடியானது கருமையுடன் இருக்கும்.
 • மூலச்சூடு, குடல் புண்கள் மற்றும்  சிறுநீர் கோளாறுகள் போன்றவை தீரும்.
 • முளைக் கீரை சாப்பிடுவதால் உடலில் உள்ள நரம்புகள் வலிமையடையும்.
 • பசி எடுக்காதவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.

சக்கரவர்த்தி கீரை

 • தாது விருத்தி ஏற்படும்.

வெந்தயக் கீரை

 • இரும்புச் சத்து அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணி.
 • ஊளைச் சதை அதிகம் உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டு வந்தால் குரைக்கும்.
 • உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
 • வாய் துர்நாற்றம் மற்றும் புளிச்ச ஏப்பம் ஆகியவற்றை விலக்கும்.
 • உடல் வலிமை அதிகரிக்க உதவுகிறது.
 • சொறி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
 • மலச்சிக்கலில் இருந்து தீர்வு தருகிறது.
 • மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலம் பெற உதவுகிறது.
 • வாதம் மற்றும் காச நோயை குணப்படுத்த உதவுகிறது.

தூதுவளை

 • ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
 • சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.

தவசிக் கீரை

 • இருமலை குணப்படுத்த உதவுகிறது.

சாணக் கீரை

 • உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது.

வெள்ளைக் கீரை

 • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

விழுதிக் கீரை

 • பசி எடுக்காதவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.

கொடி காசினி

 • பித்தத்தை தணிக்கிறது.

துயிளிக் கீரை

 • வெள்ளை வெட்டை விலக்குகிறது.

துத்திக் கீரை

 • வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணப்படுத்த உதவுகிறது.
 • வெள்ளை மூலம் விலக்கும்.

கார கொட்டிக்கீரை

 • மூலநோயை குணப்படுத்த உதவுகிறது.
 • சீதபேதியை குணப்படுத்துகிறது.

மூக்கு தட்டை கீரை

 • சளியை குணப்படுத்த உதவுகிறது.

நருதாளி கீரை

 • ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
 • வாய்ப்புண்ணை குணப்படுத்த உதவுகிறது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment